குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில் வ.உ. சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்


சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆணைக்‍கிணங்க, தூத்துக்‍குடி, மதுரை மாவட்டங்களில் வ.உ. சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மா‌லை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள, வ.உ.சி.யின் திருவுருவச்சிலைக்கு கழக கொள்கைபரப்பு செயலாளரும் தேனி மாவட்டக்‍ கழக செயலாளருமான திரு.தங்கத் தமிழ்ச்செல்வன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகர் தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.ஷ.ராஜலிங்கம், மதுரை மாநகர் வடக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் பேராசிரியர் திரு. மா.ஜெயபால், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் திரு.பரமநாதன், கழக மகளிரணி செயலாளர் திருமதி வளர்மதி ஜெபராஜ், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு. முத்தையா, கழக மாணவரணி துணைச் செயலாளர் திரு. மகேந்திர பாண்டி மற்றும் மாவட்டக்‍ கழக நிர்வாகிகள், அணி செயலாளர்கள், வட்டக்‍ கழகச் செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு, வ.உ. சிதம்பரனாரின் சிலைக்‍கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல், தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், கழகத்தினர் ஊர்வலமாக வந்து தூத்துக்குடி பழைய மாநகராட்சியில் உள்ள வ.உ.சி-யின் திருவுருவச் சிலைக்கு கழக அமைப்பு செயலாளர் திரு. S.V.S.P.மாணிக்கராஜா, கழக எம்.ஜி.ஆர். அணி இணை செயலாளர் மற்றும் தூத்துக்‍கு வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. சுந்தரராஜன், தூத்துக்‍கு தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. ஹென்றிதாமஸ், அனைத்துலக எம்.​ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் திரு. ஜெ.பாலன், கழக மகளிர் அணி இணை செயலாளர் திருமதி உமாமகேஸ்வரி கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் திரு. X.லெனின், கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர் திருமதி ஜெ. சுகந்தி கோமஸ் மற்றும் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துகொண்டு, வ.உ.சி. திருவுருவச் சிலைக்‍கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.