• சற்று முன்

    கோவில்பட்டியில் மத்தியரசு உதவியுடன் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கே.ஆர்.ஏ.பள்ளியில் மத்தியரசின் உதவியுடன் 20லட்ச ரூபாய் மதிப்பில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வகத்தினை  கூடங்குளம் அணுமின் நிலைய முதுநிலை மேலாளர் தேவபிரகாசம் திறந்து வைத்தார்.

    மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை பள்ளி மாணவ, மாணவியரின் அறிவியல் திறனை வெளிப்படுத்தவும், மேன்மைப்படுத்தவும், இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கிலும் அடல் டிங்கரிங் ஆய்வக திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் மாவட்டத்துக்கு ஒரு பள்ளியை தேர்ந்தெடுத்து ரூ.20 லட்சம் வழங்கி, ஆய்வகம் அமைக்க உதவுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி கேஆர்ஏ மெட்ரிக் பள்ளியை தேர்ந்தெடுத்து முதற்கட்டமாக ரூ.12 லட்சம் வழங்கி அடல் டிங்கரிங் ஆய்வகம் அமைத்துள்ளது. இதன் துவக்க விழா இன்று நடைபெற்றது. கூடங்குளம் அணுமின் நிலைய முதுநிலை மேலாளர் ஜெ.தேவபிரகாசம் கலந்து கொண்டு ஆய்வகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், அடல் டிங்கரிங் ஆய்வகம் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளதால், அறிவியல் கல்வியில் புதிய அத்தியாத்தை தொடங்கி உள்ளது. புதிய கண்டுபிடிப்புகள், அதற்கான ஆர்வம் தூண்டுவதற்காக இதுபோன்ற ஆய்வகங்கள் பள்ளியில் திறக்கப்படுகின்றன.இங்குள்ள கட்டமைப்புகள் மாணவர்களின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கும். நமது நாட்டுக்கு 3 லட்சம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. சூரிய ஒளி, தண்ணீர், மின்சாரம், காற்றாலை மற்றும் அணுமின் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது, என்றார் அவர். விழாவில், பள்ளி மாணவ, மாணவியரின் ஏராளமான படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad