குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை
குட்கா முறைகேடு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை டி.ஜி.பி. உள்ளிட்டோர் வீடுகளில் சி.பி.ஐ அதிரடி சோதனை - தமிழகம் முழுவதும் 40 இடங்களில் அதிகாரிகள் சோதனைகுட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை DGP உள்ளிட்டோரின் இல்லங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் குட்கா விற்பனைக்கு நாடு முழுவதும் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் வெளிச் சந்தையில் குட்கா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான ஊழல் குற்றச்சாட்டில், ஏற்கெனவே காவல்துறை உயர் அதிகாரிகள் சிக்கியிருக்கும் நிலையில், தமிழகத்தில் இன்று சுமார் 40 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை DGP டி.கே. ராஜேந்திரன், முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரது வீடுகளில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. சென்னை முகப்பேரில் உள்ள காவல்துறை DGP டி.கே. ராஜேந்திரன் இல்லத்தில் 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் காவல்துறை DGP இல்லத்தில் சிபிஐ சோதனை நடத்துவது இதுவே முதல்முறையாகும். இந்த குட்கா ஊழல் தொடர்பாக, குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவிடம் கடந்த வாரம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குட்கா விற்பனையை தமிழகத்தில் அனுமதிக்க மாதவராவிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் மாதாமாதம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ள நிலையில், இந்த சோதனை நடத்தப்படுகிறது. மாதவராவின் பெண் உதவியாளர் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
தூத்துக்குடி சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் சம்பத் என்பவரது வீட்டிலும் 7 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது.
கருத்துகள் இல்லை