• சற்று முன்

    கோவில்பட்டி அருகே பாரதி நினைவு தினத்தையொட்டி ஸ்கேட்டிங் மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்



    கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் பாரதி நினைவு தினத்தையொட்டிகோவில்பட்டி பாரதி கல்வி மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பிரச்சார ஊர்வலம் நடந்தது.



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் பாரதி பிறந்த இல்லத்திலிருந்து துவங்கிய ஹெல்மெட் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பிரச்சார ஊர்வல நிகழ்ச்சிக்கு எட்டயபுரம் வர்தக சங்க தலைவர் ராஜா தலைமை வகித்தார்.  தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற செயலர்  பரமானந்தம்,  பாரதி கல்வி மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நடந்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் பாரதி பிறந்த இல்லத்திலிருந்து தொடங்கி எட்டயபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பேருந்து நிலையம் அருகில் உள்ள பாரதி நினைவு மணிமண்டபத்தில் நிறைவடைந்தது. 



    ஊர்வலத்தின் போது ஹெல்மெட் அணிதல், மரக்கன்றுகள் நடுதல், வாக்காளர் விழிப்புணர்வு உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஸ்கேட்டிங்  செய்து மாணவர்கள் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 
    இந்நிகழ்ச்சியில் பாரதி நினைவு இல்ல காப்பாளர் மகாதேவி, டிரஸ்ட் நிர்வாகிகள் கதிரேசன், ஹேமலதா,  மற்றும் மாணவ மாணவியர்கள் பலர்  கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad