கோவில்பட்டி மற்றும் கயத்தாரில் விநாயகர் சிலை ஊர்வலம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்ட வைக்கப்பட்டு இருந்த 28 விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக மேளம், தளம் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தினை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து மகாசபா உள்ளிட்ட அமைப்புக்கள் சார்பில் 28 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. தினமும் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தன .
இந்நிலையில் இன்று விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இனாம் மணியாச்சி பைபாஸ் சாலையில் தொடங்கிய விநாயகர் சிலை ஊர்வலம் கோவில்பட்டி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மேள தளம் முழங்க சென்று செண்பகவல்லியம்மன் கோவில் முன்பு முடிவடைந்தது. இதனை தொடர்;ந்து விநாயகர் சிலைகள் அங்கிருந்து எட்டயபுரம் விளாத்திகுளம் வழியாக வேம்பார் கடலில் கரைக்க கொண்டு செல்லப்பட்டது.
இதேபோல் கயத்தாறு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 10 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு திருச்செந்தூரில் கரைக்க எடுத்துச்செல்லப்பட்டது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தினை முன்னிட்டு பிரச்சினைகள் எதுவும் ஏற்படமால் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
nms today youtube channel subscribe செய்யவும்
கருத்துகள் இல்லை