உச்சத்தில் சூதாட்டம் - நீச்சதில் மத்திகிரி காவல் நிலையம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொழிற் நிறைந்த மக்கள் அதிகம் நடமாடும் முக்கிய பகுதி, தமிழக எல்லை பகுதி என்பதால், ஆந்திரா,கர்நாடகா எல்லை பகுதி மக்கள் வந்து செல்லும் பிரதான பகுதி தான் ஓசூர்
இங்கு தொழில் வளர்ச்சியை காட்டிலும் பெருகி வரும் சூதாட்டங்களே அதிகம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள், ஓசூர் அருகே மத்திகிரி பகுதியில் லட்சக்கணக்கான ரொக்க பணம் வைத்து சூதாடி வருகிறது ஒரு கும்பல், தினந்தோறும் அன்றாட தொழிலாகவே நடத்திக்கொண்டி வருகின்றனர் சமூக விரோதிகள்,இங்கு சூதாடுபவர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் என சொல்லப்படுகிறது,
விவரமாக சொல்ல வேண்டுமானால் காவல் அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களே அதிகம் சூதாட்டங்களில் பங்கேற்ப்பதாக தெரிய வருகிறது,
ஓசூர் பகுதி கொலை,கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களுக்கு பெயர் போனதே என்றாலும், சூதாட்டங்களை தடுக்கக்கூட முடியாத வகையில் போலிசார் தயங்கி வருகின்றனர்,சூதாட்டங்களில் ஏற்ப்படும் விளைவுகள் ஆட்கடத்தல்,கொலை என விபரீதம் ஏற்ப்படுவதற்க்கு முன்பே அசம்பாவிதங்களை தடுக்க மத்திகிரி போலிசார் கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல் உடனடியான நடவடிக்கை எடுத்து, இளைய சமூகம் இதுப்போன்ற சம்பவங்பளில் ஈடுபடுவதற்க்கு முன்பே தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் ஓசூர் தொழிற் வளற்ச்சியிலும், மக்கள் வளர்ச்சியிலும், கர்நாடக வின் பெங்களூர் நகரத்திடம் போட்டி போட்டு கொண்டுள்ளது, இந்த தருணத்தில் தமிழக முதலமைச்சர் எடபாடி பழனிசாமி அவர்கள் ஒசூரை மாநகராட்ச்சியாக மாற்றப்படும் என அறிவித்து சென்றார்கள்,
தமிழகத்தின் நுழைவாயில் மற்றும் எல்லைப்பகுதியான ஓசூர் அசுர வளர்ச்சிகண்டு வருகிறது, அதனால் குற்றங்கலம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது ஆனால் ஓசூரில் உள்ள காவல் நிலயம் போதாது, காவலர்கலும் குறைவு ஆகையால் தான் நாள்தோரும் வங்கியில் இருந்து பணம் கொண்டு வரும் பொது மக்களை வழிபறி செய்து பணத்தினை கொள்ளை அடிப்பது, வீட்டின் கதவுகளை உடைத்து தங்க நகைகளை திருடி செல்வது மேலும் ஆட்களை கடத்தி கொண்று விடுவது இது போன்ற சம்பவங்கள் சர்வ சாமான்யாம அரங்கேறி வருகிறது,
இனியாவது தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி ஓசூர் மக்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது, இதை ஆச்சரியத்துடன் பொதுமக்கள் கண்டு வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை