• சற்று முன்

    மணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி


     திருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி  பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளிப்பதற்காக மணப்பாறை காவல் நிலையத்திற்கு வந்தார். அபோது பணியில் இருந்த காவல் ஆய்வாளர் கென்னெடி புகார் வாங்க மறுத்துள்ளார். நான் அவசராமக DSP அவர்களை சந்திக்க போகிறேன் பிறகு வந்து பெற்றுக்கொள்கிறேன் என்று கூறினார். 
    ஆத்திரம் அடைந்த பழனிச்சாமி நான் யார் என்று தெரியாமல் என்னிடம் மோதுகிறாய் நான் ஆளுங்கட்சி செல்வாக்கு உள்ளவன். DSP, IG யாரை சந்திக்க போனால் எனக்கு என்ன என்று காவல் ஆய்வாளரை பார்த்து தகாத வார்த்தைகள் பேசினார். பொறுமை இழந்த காவல் ஆய்வாளர் கென்னடி கவுன்சிலர் பழனிசாமியை நைய்ய புடைத்துவிட்டார்.



    இதனால் கொதிப்படைந்த பழனிச்சாமி ஊருக்கு சென்று நள்ளிரவே மக்களை திரட்டித் தர்ணா போராட்டத்தில் களம் இறங்கினார். தகவல் அறிந்த DSP ஆசைத்தம்பி மணப்பாறை காவல் நிலையத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலரை சமாதானபடுத்தி அனுப்பி வைத்தார். இச்சம்பவம் IG வரதராஜன் வரை செல்ல, உளவுத்துறை மூலம் விசாரிததில்  காவல் ஆய்வாளர் கென்னடி அடித்து உண்மை என்று அறிந்த பிறகு, காவல் ஆய்வாளர் கென்னடியை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றினார்.

    ஆளுங்கட்சினரை புரட்டி எடுத்தது ஒரு புறம் இருக்க, காவல் ஆய்வாளருக்கே இந்த நிலையா என்று காவல் துறை வட்டாரங்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad