Header Ads

  • சற்று முன்

    ஐ.சி.எப். சென்னை ரயில் அருங்காட்சியக வளாகத்தில் சென்னை எக்ஸ்பிரஸ்



    சென்னை ரயில் அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களை உற்சாகபடுத்த குளிர் சாதன வசதியுடன் கூடிய ரயில் பெட்டி போன்ற வடிவமைப்பில் புதியதாக சென்னை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரு நவீன உணவகம் (31.8.18)
    அன்று துவங்கப்பட்டது



     இந்த உணவகத்தை G R T குழும ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் நிறுவனத்தின் தலைமை செப்  திரு. சீதாராம் பிரசாத் மற்றும் ஈடன் குழும ஹோட்டல்களின் மேலாண்மை இயக்குனர் திரு. எம்.பி.வெங்கடேஷ் இருவரும் துவக்கி வைத்தனர். ஐசிஎப் ரயில் பெட்டியின் ரயில் பெட்டி கூட்டில் உட்புறம் நட்சத்திர ஹோட்டல் போன்று இருக்கைகள் சொலிக்கும் அலங்கார விளக்குகள் இது பார்க்கும் பார்வையாளர்களை எளிதில் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.இந்த நவீன உணவகத்தை இந்திய சுற்றுலா மற்றும் உணவுக் கழகம் (IRTC ) பொறுப்பேற்றுள்ளது.   இது போன்ற ரயில்பெட்டி வடிவமைப்பு உணவகம் இந்தியாவிலே இரண்டாவது இடமாகும்.



    இந்த உணவகத்தின் உட்புறம் பழங்கால டிசைன்கள் கொண்டு வடிவமைக்கப்டுளதுடன் இரு புறமும் கண்ணாடி போன்ற சன்னல்கள் உள்ளத்தால் வெளிப்புற கட்சிகளை உள்ளிருந்து காணக் கூடிய வசதியுள்ளது. ரயில் பெட்டி வெளிப்புறச்சுவர்களில் ஓவியர் திருமதி அஸ்மா மேனன் குழுவினர் வரித்துள்ள ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. ரயில்பெட்டி உணவகத்தின் வெளியே ஒரு ரயில்நிலைய நடைமேடை போன்று வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில்பெட்டி உணவகம் 3 மாத கால அவகாசத்தில் கட்டிமுடிக்கப்பட்டது இதன் சிறப்பாகும். இந்த ரயில்பெட்டி உணவகத்தில் 64 பேர் உட்கார்ந்து உணவருந்தலாம். சைனிஸ்,தென்னிந்திய, வட இந்திய, சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்படவுள்ளன. 
    திங்கட்கிழமை நீங்கலாக வாரத்தின் 6 நாட்கள் காலை 11.00 முதல் இரவு 10.00 மணி வரை இயங்கும். 
    சென்னை ரயில் அருங்காட்சியகதிற்கு வருகை தருவோருக்கு  முக்கியமாக  சிறார்களுக்கு மகிழ்ச்சி என்பதில் ஐயமில்லை. 

    எமது செய்தியாளர் : பொன் முகரியன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad