Header Ads

  • சற்று முன்

    சர்ச்சைக்குறிய வீடியோவால் பரபரப்பு.



    இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவுக்கு உட்பட்ட சாயல்குடி காவல் நிலைய ஆய்வாளர் கூலித்தொழிலாயை பணம் கேட்டு மிரட்டிய வீடியோ பதிவு வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே சிக்கல் காவல் நிலைய ஆய்வாளர் மணல் கடத்தல்காரர்களிடம் பேரம் பேசிய ஆடியோ வெளியாகி அவர் சஸ்பென்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜோக்கிம் ஜெர்ரியின் அடாவடி வீடியோ பதிவு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாயல்குடி காவல் ஆய்வாளராக பணியில் உள்ள ஜோக்கிம் ஜெர்ரி மணல் கொள்ளையர்களோடு கை கோர்த்து அடாவடி வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. சாயல்குடி அருகேயுள்ள மலட்டாற்றில் மணல் திருடும் திருட்டு கும்பலிடம் பணம் வசூல் செய்ய புரோக்கர்களை நியமித்து அவர்கள் வாயிலாக பணத்தை கறப்பதை வழக்கமாக கொண்ட சாயல்குடி காவல் ஆய்வாளர் ஜோக்கிம் ஜெர்ரி, டிராக்டர் வைத்திருக்கும் விவசாய கூலித்தொழிலாளர்களிடம், மணல் கொள்ளையர்கள் துணையோடு அத்துமீறி அடாவடி வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் சாயல்குடி அருகேயுள்ள நரிப்பையூரில் விவசாய பணிகளுக்காக ட்ராக்டர் வைத்துள்ள ராமர் என்ற ரமேஷ் மீது உள்ளூர் காழ்ப்புணர்ச்சி காரணமாக மணல் கடத்தல் கும்பலின் தவறான வழி காட்டுதலின் பேரில், சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜோக்கிம் ஜெர்ரி முறையற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு தற்செயலாக சாயல்குடி மார்க்கெட் வந்த ராமர் என்ற ரமேஷை காவல் நிலைய கஸ்டடியில் வைத்துவிட்டு, நரிப்பையூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று வீட்டுக்குள் நிறுத்தி வைக்கப்படிருந்த ட்ராக்டரை இன்பெக்டரின் டிரைவர் கோட்டைச்சாமியின் துணையோடு எடுத்துச்செல்ல முற்பட்டுள்ளார். சம்பவம் அறிந்த ட்ராக்டர் உரிமையாளர் ராமரின் மனைவி மற்றும் மைத்துனர் தடுக்க முற்பட்டபோது அவர்களை பொது இடத்திலேயே தகாத வார்த்தைகளால் பேசி மணல் இல்லாமல் வீட்டுக்குள் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ராக்டரை சாயல்குடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்ட துணை ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுத்ததால், பாதிப்படைந்து லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்ற பலர் பாதிப்புக்கு உள்ளாகினர். இதில் மாவட்டத்துக்கு உட்பட்ட காவல் துறையினரே அதிகம்.  இந்நிலையில் தனது வருமானம் போன விரக்தியில், தான் என்ன செய்கிறோம் என்று கூட அறியாமல் தான்தோன்றித்தனமாக பொது இடத்தில் கடந்த 30.06.2018ல் தடாலடியாக வீட்டுக்குள் நுளைந்து ட்ராக்டரை பறிமுதல் செய்துள்ளார் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜோக்கிம் ஜெர்ரி. இது தொடர்பான வழக்கு சார் ஆட்சியர் அவர்களின் விசாரணையில் உள்ள நிலையில், கூலி தொழிலாளி ராமர் கொடுத்த பிரத்யோக பேட்டியில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜோக்கிம் ஜெர்ரி மற்றும் அவருக்கு துணையாக செயல்பட்ட டிரைவர் கோட்டைச்சாமி, தலைமை எழுத்தர் முருகன் ஆகியோர் மீது தெளிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தார்.


    எமது செய்தியாளர் : ராமநாதபுரம் - தங்கம் பாலா 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad