Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டாசு தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை


    கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சியில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும், விதிமுறைகளை நடைபெறுவதால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட அமைப்பாளர் காளிராஜ் தலைமையில் கட்சியினர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக துணை இயக்குநர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



    கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்தில் இயங்கி வரும் தனியார் பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முறையான இஎஸ்ஐ, பிஎப் வாங்குகின்றனர். ஆனால் அரசுக்கு பணம் கட்டுவதில்லை. பாதுகாப்பு கவசங்கள், சீருடைகள் வழங்கவில்லை. கட்டடங்களுக்கு இடையே போதிய இடைவெளி இல்லாமலும், நெருக்கமாவும், காற்றோட்டம் இல்லாமலும் இருப்பதால் பட்டாசு ஆலையில் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. நெருக்கமாக உள்ள இடத்திலும் புதிதாக கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்து கட்டுமானம் நடக்கிறது என்றும், தனியார் பட்டாசு ஆலையில் சட்ட விதி மீறல்களை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட அமைப்பாளர் காளிராஜ் தலைமையில் கட்சியினர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக துணை இயக்குநர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட உதவி இயக்குநர் ஆர்.சுடலை செல்வம், உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பது கூறினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad