பட்டப் பகலில் தம்பதிகளை தாக்கி நகை கொள்ளை !
*ஓசூர் மலைக்கோவிலில் வழிபட வந்த தம்பதிகளை தாக்கி, நகை கொள்ளை, பட்டபகலில் துணிகரம்*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புகழ்பெற்ற சந்திர சூடேஷ்வரன் மலைக்கோவிலில் வாரந்தோறும் திங்களன்று சிறப்பு பூஜைகளால் விஷேமாக இருப்பது வழக்கம்
இந்நிலையில் இன்று மாலை தம்பதிகள் கோவிலில் வழிப்பட்டு அதன் பின்பு பூங்காவிற்க்கு சென்றுள்ளனர், அவர்களை வெகுநேரமக நோட்டமிட்ட ஐந்து பேர் கொண்ட மர்ம நபர்கள் பூங்காவில் உள்ள பெண்ணை பலமாக தாக்கி, மண்டை உடைக்கப்பட்ட நிலையில் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரண் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர்,
சிலநிமிடங்களிலே நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த தம்பதிகள், ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், புகாரை பெற்று கொண்ட நகர போலீஸார் சம்பவிடத்திற்க்கு சென்று விசாரணை செய்து வருகிறார்கள், மேலும் தப்பி ஓடிய கும்பளை தேடி வருகிறார்கள்
ஓசூர் பகுதிகளில் போலிசாரின் அதிரடி நடவடிக்கையால் சிலநாட்கள் திருட்டு,வழிப்பறை சம்பவங்கள் குறைந்திருந்த நிலையில், மீண்டும் மக்கள் நடமாட்டம் நிறைந்த கோவில் பூங்காவில் தாக்கிவிட்டு வழிப்பறி செய்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்,
காயமுற்ற தம்பதிகள் இரத்தம் சொட்ட ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
ஓசூர் நகர போலிசார் சம்பவம் குறித்து கோவில் வளாகத்திற்க்கு உள்ள பக்தர்களிடம் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை