Header Ads

 • சற்று முன்

  ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள உறைக்கிணறு கிராமத்தில் முளைப்பாரி உற்சவம்

  ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள உறைக்கிணறு கிராமத்தில் முளைப்பாரி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுதந்திர போர் முழக்கமிட்ட மாவீரன் பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் போர் தொடர்பாக ஆலோசனை செய்ய ராமநாதபுரம் சேதுபதி மன்னரை சந்திக்க மங்கம்மா சாலை வழியாக வரும் வழியில்  தூத்துக்குடி மாவட்ட எல்லையான வேம்பார், ராமநாதபுரம் மாவட்ட துவக்க எல்லையான கன்னிராஜபுரம், நரிப்பையூர் பகுதிகளில் ஓய்வெடுக்க மடங்களை கட்டியதுடன், தனது குதிரைகளின் தாகம் தீர்க்க உறையால் அமைக்கப்பட்ட குடிநீர் கிணற்றை படை வீரர்கள் துணையுடன் வெட்டியுள்ளார். அந்த இடமே தற்போது உறைக்கிணறு என அழைக்கப்படுகிறது.  வரலாற்று சிறப்புமிக்க இந்த கிராமத்தில் சத்திரிய இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்டு பன்னெடுங்காலமாக  அருள் பாலித்து வரும் ஸ்ரீ பத்திரகாளியம்மன், ஸ்ரீ உச்சயினி மாகாளியம்மன் திருக்கோவில் உற்சவம் சாயல்குடி ஜமீன்தார் மேதகு வி.வி.எஸ்.ஏ. சிவஞானபாண்டியன் அவர்களது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விழா தொடக்க நிகழ்வாக செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை, அம்மன் அருள் சண்முகப்பட்டர் நடத்தி வைத்தார். ஒவ்வொரு நாளும் பகல் இரவு வேளைகளில் பொதுமக்கள் பங்களிப்புடன் பொது அன்னதானம் நடைபெற்றது.  அதனைத்தொடர்ந்து அம்மன் திருத்தேர் பவனி, முளைப்பாரி கும்மி கோலாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தெற்கு நரிப்பையூர் கடற்கரையில் கலக்கப்பட்டது.

  பல்லாயிரக்கணக்கானோர் கூடும் விழாவானதால் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக சாயல்குடி (பொறுப்பு) பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் தலைமையிலான ஊழியர்கள் மற்றும் வட்டார 

  தலைமை மருத்துவர் சரவணன்,  சாயல்குடி அரசு மருத்துவமனை செவிலியர்கள் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.  அதனைத்தொடர்ந்து சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோக்கிம் ஜெர்ரி, சப் இன்ஸ்பெக்டர்கள் விஜய பாஸ்கர், செல்வி.சாரதா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கிராம தலைவர் குரு நாடார் மற்றும் கிராம நிர்வாகிகள் வேல் நாடார், ஆனந்தன், கடற்கரை தங்கம், சின்னராஜா, பால்ராஜா ஆகியோர் செய்தனர். விழாவில் சிறப்பு அழைப்பார்களாக திமுக பிரமுகர் வி.சி.மனோகரன், தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளர் சிங்கைஜின்னா, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.அசோக்,  தேமுதிக சாயல்குடி ஒன்றிய செயலாளர் மாணிக்கவேல்,  அதிமுக சாயல்குடி ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.பி.அந்தோணிராஜ், சிவசேனா மாவட்ட பொதுச்செயலாளர் இ.எஸ்.கோட்டைச்சாமி நாடார், அவைத்தலைவர் மீனங்குடி சுந்தர வடிவேல் தேவர், செய்தி தொடர்பாளர் எஸ்.தங்கம், வணக்கம் இந்தியா செய்தியாளர் மாரிச்சாமி, தேமுதிக மாநில நிர்வாகி முத்துப்பாண்டியன் யாதவ், சிவசேனா மாவட்ட அமைப்பாளர் ஸ்டாலின், பாஜக ஒன்றிய உள்ளாட்சி அமைப்பாளர் திருமுருகன், ஆலய பாதுகாப்பு குழு மாநில பொறுப்பாளர் கே.ஆர்.கே, அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.பி.மாடசாமி மற்றும் சட்ட நாயகன் சிலுவை நாடார் அன்புத்தம்பிகள் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


  விழா ஏற்பாடுகளை உறைக்கிணறு சத்திரிய இந்து நாடார் உறவின் முறையாளர்கள், கிராம நிர்வாகிகள், சித்தி விநாயகர் இளைஞர் எழுச்சி இயக்கம் மற்றும் அனைத்து மகளிர் மன்றங்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

  செய்தியாளர் : ராமநாதபுரம் - தங்கம் பாலா

  செய்திகளை உடனுக்குடன் அறிய nms today youtube channel subscribe செய்யவும்.

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad