மணல் கொள்ளையை வேடிக்கை பார்க்கும் அரசு அதிகாரிகள்
ஓசூர் கெலமங்களம் ஏரியை மராமத்து பணி செய்வதாக கூறி மணல் கொள்ளையில் ஈடுப்படும் கும்பல் , வேடிக்கை பார்க்கும் அரசு அதிகாரிகள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்களத்தில் உள்ள நஞ்சையன் ஏரி, சர்வே எண் -165 தில், சுமார் 68 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ள ஏரியாகும், தற்போது இந்த ஏரி முழுவதுமாய் செடி கொடி , குப்பைகளும் கோழி கழிவு
களும் மற்றும் தொழிற்சாலைகளின் இரசாயன கழிவுகளும் நிரைந்துள்ளன மேலும் கெலமங்களத்தின் சுற்றிவுள்ள இராசயன கழிவுகள் கொட்டப்படுவதால் ஏரியின் நிலத்தடி நீர் மாசு கலந்து நீராக மாரிவருகிறது,
மற்றொருப்புறம் நஞ்சையன் ஏரியை மராமத்து பணி செய்வதாக தமிழக அரசு மூன்று திட்டத்தின் கீழ் சுமார் 60 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது, ஆனால் ஏரியை மராமத்து பணி எதுவும் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது, மேலும் சில சமூக விரோதிகள் ஏரியில் ஆங்காங்கே குழிப்பரித்து சுமார் 20 அடி முதல் 30 அடி பல்லம் எடுத்து அங்கிருந்து மணல்களை கடத்தி வருகிறார்கள், இவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கைகள் போலீஸாரும் சரி அரசு அதிகாரிகலும் சரி இன்று வரை எடுத்ததில்லை . மாறாக மணல் கடத்தும் சமூக விரோதிகளிடம் லஞ்சத்தை பெற்று கொண்டு மணல் கடத்தும் கும்பளை விட்டு விடுகிறார்கள்.
கெலமங்கலத்தின் ஊர் பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வாளர்களும் மாவட்ட நிர்வாகத்திடம் நஞ்சையன் ஏரியில் மணல் கடத்தும் கும்பலை பிடித்து மற்றும் தொழிற்சாலை கழிவுகளையும் இரசாயன கழிவுகளையும் கொட்டி செல்லும் நபர்களை பிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, கெலமங்களத்திற்க்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வரும் ஏரியை மீட்டு தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
எமது செய்தியாளர் : கிருஷ்ணகிரி - சி. முருகன்
கருத்துகள் இல்லை