• சற்று முன்

    சுதேசி பற்றி பா.ஜ.க தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் - நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் பேச்சு


    சுதேசி பற்றி பா.ஜ.க தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், எல்லா வளம் இருந்து வேலையின்மை, வறுமை என்றால் நாம் நம்முடைய வரலாற்றினை மறந்தது தான் காரணம் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் வெற்றி சீலன் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சுதந்திர போராட்ட வீரர்கள் அழகுமுத்துக்கோன், வ.உ.சி. வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தென்மண்டல செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் வெற்றி சீலன் கலந்து கொண்டு பேசுகையில்திமுக கூட்டத்தில் கருணாநிதி புகழையும், அதிமுக கூட்டத்தில் ஜெயலலிதா புகழை பேசுவதை தவிர வேற எதுவும் நடக்காது, ஆனால் தமிழரின் பண்பாடு, மொழியின் வரலாற்றினை ஒலிக்கூடிய மேடை நாம் தமிழர் மேடை, வரலாறுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு விட்டது, சிலரால் மாற்றி எழுதப்படுகிறது. ஆகையால் தான் எங்கோ பிறந்த காங்கிரஸ் தலைவர்கள் பெயரை சூட்டிய தமிழன்,  தமிழகத்தில் நம்முடைய சுதந்திர போராட்ட தலைவர்களை பெயர்களை வைப்பதில்லை, இந்த மொழிக்கும், மண்ணுக்கு சம்பந்த இல்லாதவர்களை பெயர்களை வைத்த தமிழன் இன்று சினிமா நடிகைகள் பெயரை வைக்க தொடங்கி விட்டான். சுதேசி என்று குறித்து பா.ஜ.க தலைவர் பொன்..ராதாகிருஷ்ணன் தமிழிசை தெரிந்து கொள்ள வேண்டும், எல்லா வளம் இருந்து வேலையின்மை, வறுமை என்றால் நாம் நம்முடைய வரலாற்றினை மறந்தது தான் காரணம் என்றார். இதில் திரளான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    செய்திகளை உடனுக்குடன் அறிய nms today youtube  cheenal பார்க்கவும்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad