• சற்று முன்

    கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல் ஊழியர;கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்


    கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 3மாதங்களாக வழங்கப்படமால் இருக்கும் ஊதியத்தினை வழங்க வேண்டும், பிரதி மாதம் 7ந் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து தொடர்  காத்தியிருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்



    பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு தொலை தொடர்பு துறையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர;களுக்கு கடந்த 3மாதங்களாக வழங்கப்படமால் இருக்கும் ஊதியத்தினை வழங்க வேண்டும்ரூபவ் பிரதி மாதம் 7ந்தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும்,  குறைந்தபட்ச ஊதியமாகரூபாய் 18 ஆயிரம் வழங்க வேண்டும்,  பி.எஸ்.என்.எல் நிர;வாகத்தின் உத்தரவுப்படி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் வழங்குவதை ஒப்பந்ததார்கள் உறுதிபடுத்த வேண்டும், மேலும் பி.எப், இ.எஸ்.ஐ. ஆகியவற்றை உறுதிபடுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் அனைத்து தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று முதல் தொடர்  காத்தியிருப்பு போராட்டத்தினை தொடங்கியுள்ளனர் . ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர பணியில் உள்ள தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர் . கோவில்பட்டி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல் தொழிலாளர;கள் யூனியன் தலைவர்  மகேந்திரமணி தலைமையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர் ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ரூடவ்டுபட்டனர;. தொடர;ந்து அலுவலக வளாகத்தில் காத்தியிருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்கள் யாரும் பணிக்கு செல்லாத காரணத்தினால் பி.எஸ்.என்.எல் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர் .



    செய்தியாளர் : கோவில்பட்டி  - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad