Header Ads

  • சற்று முன்

    திருவாடானையில் திறந்து ஒரு மாதமே ஆன அனைத்து மகளிர் காவல் நிலைய கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளது


    திருவாடானையில் தமிழக அரசால் கட்டப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய கட்டிடம் 41 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த கட்டிடம் திறப்பு விழா கண்டதில் இருந்து இங்கே மகளிர் காவல் நிலையம் இயங்கி வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட இந்த கட்டிடத்தின் நிலை தற்போது பரிதாபமாக உள்ளது சுவர் சிமெண்ட் பூச்சுகள் மணலாக உதிர்ந்துவிட்டது 



    ஆங்காங்கே செங்கல்கள் தெரிகின்றன மேலும் ஜன்னல் மேல் போடப்பட்டுள்ள சிலாப்புகளும் எப்பொழுது வேண்டுமானாலும் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது இதுகுறித்து திங்கட்கிழமை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கல்வெட்டு பதிக்க வந்து இன்ஜினியரிடம் கேட்டபொழுது  உப்புக் காற்று அடிப்பதால் அவ்வாறாக உள்ளது என்று அலட்சியமாக பதில் கூறினார். உப்புக் காற்று இருக்கும் இந்த கட்டிடத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த கட்டிடத்திற்கு அருகில் கட்டப்பட்ட அரசு கட்டிடங்கள் மிகவும் பலமாக உள்ளது மேலும் இந்த கட்டிடம்  கட்டப்பட்ட இடத்திற்கும் உப்புக் காற்றிற்கும் சம்பந்தமே இல்லை. மேலும் இந்த கட்டிடத்தின் உள்ளே குளியல் அறை, கழிப்பறைகளில் பொருட்கள் ஒழுங்காக இணைக்கப்படாமல் அரைகுறையாக உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். இங்கு இருப்பவர்களுக்கும் பொது மக்களுக்கும் குடிதண்ணீர் குழாய் வசதி  செய்துதரப்படவில்லை. மேலும் இந்த கட்டிடத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் இல்லாததால் ஆபத்தான நிலையில் உள்ளது எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தார்கள்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad