*ஓசூரில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு வித்யாமந்திர் பள்ளியில் மாரத்தான் போட்டி*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் பள்ளி சார்பில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டும் , பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்பதனை வலியுறுத்தி 5 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது
ஓசூரில் உள்ள வித்யா மந்திர் பள்ளியின் சார்பாக தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டும் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்போம், பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்ப்போம் என்பதனை வலியுறுத்தி 5 கிலோமீட்டர் தூரம் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது ,இதில் பள்ளி குழந்தைகள் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்
இப்போட்டியினை தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
இதில் மகரிஷி பள்ளியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் புனித் முதலாவதாக வந்து சேர்ந்தார் , அவருக்கு சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை