Header Ads

  • சற்று முன்

    சலிக்காமல் ஆர்பாட்டம் செய்யும் பொது மக்கள் சலிக்காமல் அலட்சியம் செய்யும் மாநகராட்சி



    சென்னை மதுரவாயில் சட்டமன்ற தொகுதியான 148வது வார்டு பகுதி 33 மண்டலம் 11 உட்பட்ட கோவர்த்தன நகர் பகுதியில் 4,5,8 தெருக்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். மழை நீர் வடிகால் செய்து தர சொல்லி பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.



    இந்த பகுதியை சுற்றி பள்ளிகள், மருத்துவமனைகள், அம்மா உணவகம் இயங்கி வருகின்றன. வீட்டின் முன்னாடியும் சாக்கடை கழிவு நீர் தேங்கி இருக்கின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை துருநாற்றம் வீசும் காற்றை சுவசிப்ப்பதால் சுவாச கோளறு சம்மந்தப்பட்ட நோய்கள் உருவாவதாக பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றன்றனர். மேலும் இரவில் கொசுக்களின் தொல்லை அதிகரிக்கிறது . இதனால் டைபாயிடு, மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவும் என்ற அச்சத்தில் மக்கள் வசிக்கின்றனர் .


    இது குறித்து பல முறை அரசு அதிகாரிகள் அமைச்சர் வரை புகார் அளித்தும் எந்தொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த செயல் அதிகாரிகளின் அலட்சியமா அல்லது அரசின் மெத்தன போக்கா ? இதை அதிகாரிகளின் கவனம் ஈர்க்கும் வகையில் இன்று காலை அப்பகுதி மக்கள் சாலை மாறியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



    எமது செய்தியாளர் : பொன் முகரியன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad