• சற்று முன்

    மதுவினால் வரும் வருமானம் தமிழக அரசுக்கு அவமானம் என பாமக தலைவர் ஜி.கே. மணி



    வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தனியார் அரங்கில் வேலூர் மேற்கு மாவட்ட‌ பாமகவின் பொது குழு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில துணை பொதுச் செயலாளர் டி.கே. ராஜா தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பொன்னுசாமி, மாநில மகளிர் அணி தலைவர் நிர்மலா ராசா, மாவட்ட செயலாளர் கிருபாகரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் அக்னி விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில தலைவர் ஜி.கே. மணி கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். 

    அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர். தமிழ் நாட்டின்  மிக முக்கியமான ஆறுகளில் ஒன்று  பாலாறு. தென் இந்தியாவின்  ஜீவ நதியாக விளங்கிய ஆறு இந்த பாலாறு ஆனால் இன்று அந்த ஆறே பால போன ஆறாக உள்ளது. இது மிகவும் வேதனைக்குரிய சம்பவம் ஆகும். இதை பாதுகாக்க தான் வருகின்ற 22, 23 ஆம் தேதிகளில் பாமகவின் மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி அவர்கள் பாலாறு தொடங்கும் ஆந்திரா எல்லையில் இருந்து காஞ்சிபுரம் மாவட்ட எல்லை வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். தற்போது நாட்டில் பெட்ரோல் , டீசல்  விலை உயர்வால் இன்று அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாய நிலையில் உள்ளது. அன்டை மாநிலமான கர்நாடகாவில் பெட்ரோல் டீசல் விலையை 2 ரூபாய் குறைந்து உள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோல் தமிழக அரசும் உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முன் வரவேண்டும். குட்கா வழக்கில் ஈடுபட்டுள்ள அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் ஆனால் ஆளும் கட்சி அவருக்கு கட்சியில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது தான்‌ மிகவும்  வேதனையாக உள்ளது. எங்கள் இந்த பயணம் பொதுமக்களின் நலன் காக்க மட்டுமே தவிர தேர்தல்க்கான‌ பயணம் இல்லை. தமிழக அரசு மதுபானத்தின்  மூலம் வரும் வருமானத்தை வைத்து தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதாக கூறுவது  அவர்களை அவமதிக்கும் செயல் ஆகும். அண்ணா ஆட்சியில் இருக்கும் போது கூறினார் மதுவினால் வரும் வருமானம் தொழுநோயாளி கையில் இருக்கும் நெய் போன்றது அப்படி ஒரு வருமானம் தேவை இல்லை என்று கூறினார். ஆனால் அவர்  பெயரில்  கட்சியை வைத்து கொண்டு  ஆளும் அதிமுக அரசு மது விற்பனையை செய்வது மிகவும் வேதனையாக உள்ளது என கூறினார். 

    செய்தியாளர் : வேலூர்  -சரவணன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad