Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே மீண்டும் மின் வயர் துண்டிப்பு –ரெயில் சேவை பாதிப்பு- டீசல் என்ஜீன் மூலமாக இயக்கப்படும் ரெயில்கள்



    கோவில்பட்டி பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது இந்த மழைக்கு கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து அருகிலிருந்த ரயில்வே மின்கம்பத்தில் விழுந்ததில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு மின் வயர் அறுந்து விழுந்தது. இதனால் ரயில்களுக்கு செல்லக்கூடிய மின்சாரம் தடைபட்டது இதன் காரணமாக ரயில்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. 


    தென் மாவட்டங்களில் இருந்து இயக்கக்கூடிய அனைத்து ரயில்களும் ஆங்காங்கே உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தூத்துக்குடி விருதுநகர் திருநெல்வேலி கோவில்பட்டி மதுரை ஆகிய ரயில்வே நிலையங்களில் சார்ந்த மின்சார பொறியாளர்கள் ரயில்வே பணியாளர்கள் துண்டிக்கப்பட்ட மின்வெட்டை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர் தற்காலிகமாக ரயில்கள் செல்வதற்காக மின் வயர் சரிசெய்யப்பட்டது இதில் 30க்கும் மேற்பட்ட ரயில்வே நிலைய பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அதிகாலை ஒரு மணி முதல் அனைத்து ரயில்களும் ஒன்றன்பின் ஒன்றாக  செல்லத்தொடங்கினர். மின் வயர் துண்டிக்கப் பட்ட இடத்தில் மட்டும் சுமார் 30 கிலோ மீட்டர் வேகத்தில் அனைத்து ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று காலையில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் அதிவேகமாக வந்த காரணத்தினால் மீண்டும் மின் வயர் துண்டிக்கப்பட்டு ரெயில்சேவை பாதிக்கப்பட்டது.ரெயில்கள் ஆங்கங்கே நிறுத்தப்பட்டன. 

    மேலும் தற்காலிகாக ஏற்படாக ரெயில் நிலைய அதிகாரிகள் டீசல் என்ஜீன் மூலமாக மின்வயர் பாதிக்கப்பட்ட பகுதியை கடக்க ஏற்படு செய்தனர். நெல்லையில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரெயில், நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் மும்பை எக்ஸ்பிரஸ், குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ், நாகர்கோவிலில் இருந்து கச்சகுடா செல்லும் கச்சகுடா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் இருந்து டீசல் என்ஜீன் மூலமாக சாத்தூர் கொண்டு விடப்பட்டு அங்கிருந்து மின்சார என்ஜீன் மூலமாக இயக்கபட்டது. அதே போன்று பெங்களுரில் இருந்து தூத்துக்குடி செல்லும் மைசூர் எகஸ்பிரஸ், திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ்,, தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள்  சாத்தூரில் இருந்து கோவில்பட்டி வரை டீசல் என்ஜீன் மூலமாக கொண்டு வரப்பட்டு, அதன் பின்பு மின்சார என்ஜீன் மூலமாக இயக்கப்பட்டன. தொடர்ச்சியாக ரெயில்கள் வந்த காரணத்தினாலும், அவ்வப்போது லேசான மழை தூறல் காரணமாகவும் மின்வயர் சரி செய்யும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இரவுக்குள் தற்காலிகாக ஏற்படாக மின்வயர் இணைப்பு செய்யப்பட வாய்புள்ளதாகவும், இல்லை என்றால் டீசல் என்ஜீன்மூலமாக தான் ரெயில்கள் இயக்கபடலாம் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

    நேற்று பெய்த மழைக்கு ரெயில்வே மின்வயர் துண்டிப்புக்கு காரணமான மேற்கூரை அப்பகுதியில் கதிரேசன் என்பவருக்கு சொந்தமான ஹலாபிளாக் கல் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. பலத்த காற்றுக்கு மேற்கூரை பெயர்ந்து ரெயில்வே மின்வயரை துண்டித்தது மட்டுமின்றி, அப்பகுதியில் கீர்த்தி மகேஷ் என்பவரது சிப்ஸ்கம்பெனியை சேதப்படுத்தியுள்ளது. மேலும் 2 மின்சார கம்பங்களையும் சேதப்படுத்தியது தெரிய வந்தது

    எமது செய்தியாளர் : கோவில்பட்டி சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad