Header Ads

  • சற்று முன்

    மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தேசிய கீதம் பாடப்பட்ட செயல் மாணவர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


    சென்னை மதுரவாயல் அடுத்த வேலப்பன்சாவடியில்  டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் 27 வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்குபெற்றார்.  ஆளுநர் மேடைக்கு வந்தவுடன் தமிழ் வாழ்துடன் நிகழ்ச்சி துவங்கியது.பின்னர் பேசிய ஆளுநர்  அனைவருக்கும் மாலை வணக்கம் என தமிழில் கூறி சிறப்புரையாற்றினார்.ஆங்கிலத்தை விட தமிழ் இனிமையான மொழி என்று பெருமை பாராட்டினார். 


    பட்டமளிப்பு விழாவில் மருத்துவம், பொறியியல்,கலை அறிவியல் உள்ளிட்ட துறைகளில் பயின்ற 2303 முதுநிலை மற்றும் இளநிலை பட்டதாரி மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்குவதாக இருந்தது.ஆளுநர் ஒரு சில மாணவர்களுக்கு மட்டும் பட்டங்களை வழங்கினார். இதையடுத்து தேசிய கீதம் பாடப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஆளுநர் புறப்பட்டுச் சென்றார்.இதனை தொடர்ந்தும் மீண்டும் பட்டமளிப்பு விழா துவங்கியது.பொதுவாக எந்தவொரு நிகழ்ச்சியிலும் தேசிய கீதம் பாடல் பாடிய பின்னர் நிகழ்ச்சி நிறைவடைந்துவிடும். 



    ஆனால் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தேசிய கீதம் ஆளுனருக்காகவும்,சம்ரதாயத்திற்காகவும் பாடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதேபோல் இந்த சம்பவம் அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே சலசலப்பையும் ஏற்படுத்தியது. மக்களுக்கு தேசபற்று ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் பொது நிகழ்வுகளில் தேசிய கீதம் பாடப்பட்டு வருகிறது.மாணவர்களுக்கு தேசப்பற்றை போதிக்க வேண்டிய  கல்வி நிலையங்கள்  இது போன்று எல்லை மீறக்கூடாது என்பது அனைவரின் வேண்டுகோள்.

    எமது செய்தியாளர் : திருவள்ளூர் - கதிரவன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad