என்னைக் கொல்லாதே ஆசிரியர் நீலம் மூன் இதன் முன் கதை (1.09.18)
ஐயோ, அப்பா....ப..பா இது என்ன சோதனை சாமீ பூனையின் கழுத்தை யாரு அறுத்து இப்படி வாசலே இரத்தம் ஓட போட்டு இருக்காங்களே, பாவமே உசுருக்கு போராடுதே கடவுளேனு அலறினான், பின் தொடர்ந்து வந்த காந்த தடுத்து நிறுத்தினான். வேண்டாமடா இந்த கோரத்தை உன்னால் காண முடியாது. அங்கிள் வாசலை சுத்தப்படுத்துங்க எனச் சொன்னவன், குடுகுடுப்பைக் காரனைத் தேடினான்,
அவன் தென்படவே இல்லை. சட்டென மறைந்தான். நீலேஷ் உள்ளம் அச்சத்தில் டிரெயின் ஓடியது. ஆன்டி மரணம் இயற்கையா அல்லது மர்மங்கள் புதைந்துள்ளதா. புலி வால் தொட்டாச்சு விட்டவும் முடியாது நடக்குறது நடக்கட்டும் சிவன் போக்கு சித்தன் போக்கு என எண்ணி நிமிர்ந்தான். எதிர் வீட்டின் மீது பார்வைப்படவே அவளா.... ,கூர்ந்து நோக்கியவன் ஆச்சரியத்தில் கண்ணைத் தேய்த்து கவனித்தான் அதற்குள் அவள் பட்டாம்பூச்சியாய் பறந்து விட்டாள். மதிய உணவு பேருக்கு கொறித்து ஒய்வு எடுக்க முயற்சி செய்தான். கண்ணை மூடினால் கண்டேயினரும், கத்தியும் தோன்றி அச்சுரித்தியது தன்னை கொல்ல அலையும் நபர் யாராய் இருக்கும்.நீலேஷ் .....டேய் அந்தபொண்ணை பாத்தியா ஆன்டி மாதிரி சாடை ஒத்தி இருக்குல்ல என்னடா எதுவும் பேசாமால் பேய் அறைஞ்சவனாட்டம் முகமெல்லாம் வெளிறி கிடக்கு. சொல்லுடா மழுப்பாம சொல்லு வற்புறுத்தினான்.
பொறுக்காமல் நடந்ததைக் கூறினான். மாப்பிள்ள என்னடா விபரீதம் அந்தபெண்ணு எதிர்வீட்டுல பாத்தியா. ஆமாடா .சலிப்புடன் மொழிந்தான். நீலேஷ் அன்று மாலை நண்பர்கள் இருவரும் தோட்டத்தில் உலாவி உரையாடினர். காந்தன் வீட்டிற்கும் அடுத்த வீட்டிற்கும் இடையே தடுப்புச் சுவர் இல்லை கம்பி வேலி சும்மா பேருக்கு போடப்பட்டிருந்தது. அதே சமயம் பக்கத்து வீட்டிலிருந்து யாரோ மறைந்து எட்டி எட்டி தலையை நீட்டுவது போல தென்பட்டது. ஆன்டி மோதிரம் மாதிரி அந்த பெண்ணு விரல்ல எப்படி நாலாபக்கமும் கண்களை சுழற்றினான். அண்ணா அண்ணா என்று அழைத்தவாறு பத்து வயது மதிக்கத் தக்க சிறுவன் பக்கத்து வீட்டு வேலியை தாண்டி வந்து ஒரு காகிதத்தை நீட்டினான். வாங்கி படிப்பதற்குள் அந்த சிறுவன் ஓடி விட்டான் பிரித்து பார்த்தவன் கண்கள் இருண்டது. மண்டை ஓடு மீது இரத்தத்தால் உனக்கு மரணம் காத்திருக்கு ........
கருத்துகள் இல்லை