தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எம்பி அன்புமணி கோரிக்கை.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றை பாதுகாக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாலாறு பாதுகாப்பு வாகன பேரணி வேலூர்- காஞ்சிபுரம் மாவட்டங்களில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி எம்பி தலைமையில் இரு தினங்கள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் பெரும்பள்ளம் பகுதியில் உள்ள தமிழக- ஆந்திரா எல்லையில் ஆந்திரா அரசு கட்டி உள்ள தடுப்பனைகளை பார்வையிட்டார். அப்போது அங்குள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கனகநாச்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.
வேலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பாலாறு கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் என்ற ஆரம்பித்தது கர்நாடக மாநிலத்தில் 93 கிலோமீட்டர் கடக்கிறது. அந்த பகுதிகளில் 3 தடுப்பணைகள் மற்றும் 14 ஏரிகளை கர்நாடக அரசு கட்டி உள்ளது. இது மைசூர்- மதராஸ் மாகாணங்களுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். ஆந்திரா மாநிலத்தில் 23 கிலோமீட்டர் கடக்கிறது ஆனால் ஆந்திரா அரசு 33 இடங்களில் தடுப்பணைகள் மற்றும் 3 ஏரிகள் கட்டி உள்ளது. இந்த தடுப்பணைகள் 6 அடிகளில் இருந்ததை தற்போது 24 அடிகாளாக கட்டி உள்ளது. அதன் உயரத்தை உடனே குறைக்க வேண்டும். தமிழ்நாட்டில் 223 கிலோமீட்டர் கடக்கிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் ஆற்காடு அருகே ஒரே தடுப்பணை மட்டுமே கட்டியுள்ளார். ஆனால் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள் பாலாற்றில் இதுவரை ஒரு தடுப்பணைகள் கூட கட்டவில்லை. அதிமுக- திமுக கட்சி ஒருவரையொருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறுவதை தமிழக மக்கள் நன்றாக கவனித்து வருகிறார்கள். 7 தமிழர்களின் விடுதலையில் தமிழக ஆளுநர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். இவர்கள் விடுதலை மத்தியில் ஆளும் பாஜக கையில் தான் உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு அவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் அரசியல் செய்ய இது நேரம் அல்ல என கூறினார். உடன் மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னால் மத்திய அமைச்சர்கள் அரங்கவேலு, சண்முகம், முன்னால் எம்எல்ஏக்கள் டி.கே. ராஜா, இளவழகன்,முரளி, நடராஜன், மாவட்ட செயலாளர் கிருபாகரன், மாநில துணை தலைவர் பொன்னுசாமி, மாநில வன்னியர் சங்க செயலாளர் முரளி, மாநில வன்னியர் சங்க துணை தலைவர் கணபதி, மாநில இளைஞரணி துணை செயலாளர் அக்னி விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், சதீஸ்குமார், சிலம்பரசன், இளங்கோ நகர செயலாளர் ரமேஷ்குமார், உட்பட்ட இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பெரும் திரளாக கலந்துகொண்டனர். இதனால் ஆந்திரா- தமிழக எல்லையில் இரு மாநில போலிசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வேலூர் - அக்னி புயல்
கருத்துகள் இல்லை