ஓசூரில் பெட்டிக்கடையில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது- நகர போலிசார் அதிரடி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானசந்திரம் பகுதியில் பெட்டிகடை நடத்தி வரும் கோபால் (49) அவரதுகடையில் கஞ்சா விற்பனை நடைப்பெற்று வருவதாக ஓசூர் நகர போலிசாருக்கு இரகசிய தகவலின் அடிப்படையில்,
அதிரடியாக ஆய்வு மேற்க்கொண்ட நகர காவல்துறையினர் சானசந்திரம் பெட்டிக்கடையில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 290 கிராம் எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றினர். கடை உரிமையாளர் கோபாலை அதிரடியாக கைது செய்து காவல்நிலையத்திற்க்கு அழைத்து வரப்பட்டார்,
மேலும் இது குறித்து கஞ்சா வைத்திருந்த கோபாலிடம் நகர போலீஸார் தீவிர விசரனை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : முருகன் .சி .
கருத்துகள் இல்லை