• சற்று முன்

    கோவில்பட்டியில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வினை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்


    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவில்பட்டியில் ஆட்டோ, வேன் டிரைவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 


    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், வாகனங்களுக்கான காப்பீட்டு தொகை உயர்த்தப்பட்ட கண்டித்தும். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு மாட்டு வண்டியில், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை ஏற்றி, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அண்ணா தொழிற்சங்கம் பி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஐஎன்டியுசி மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.ராஜசேகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். 
    சுமை ஆட்டோ சங்க தலைவர் குழந்தை பாண்டி, வேன் ஸ்டாண்ட் தலைவர் கே.மகாராஜன், அம்பேத்கர் சுமை ஆட்டோ சங்க தலைவர் எம்.பாலமுருகதண்டபாணி, செயலாளர் எம்.முருகன் உட்பட ஆட்டோ, கார், வேன் டிரைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad