Header Ads

 • சற்று முன்

  கோவில்பட்டி அருகே வஉசி பிறந்த நாள் விழா - 228 பேருக்கு ரூ.59 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்  கோவில்பட்டி அருகே ஓட்டப்பிடாரத்தில் நடந்த சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 228 பேருக்கு ரூ.59 லட்சத்து 62 ஆயிரத்து 682 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஓட்டப்பிடாரம், வ.உ.சிதம்பரனாரின் நினைவு இல்லத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 147வது பிறந்த நாள் விழா நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.   மேலும். வ.உ.சிதம்பரனாரின் வாரிசுதாரர் .செல்விக்கு கௌரவித்தார். தொடர்ந்து வ.உ.சி பிறந்த நாளை முன்னிட்டு நடந்த கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவியர்களுக்கு புத்தகம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தமிழ்வளர்ச்சி துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட பொன் விழா ஆண்டினை முன்னிட்டு, கல்லூரி அளவில் நடைபெற்ற கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ, மாணவியர்களுக்கு ரொக்கப்பரிசாக ரூ.30 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பின்னர், 228 பயனாளிகளுக்கு ரூ.59 லட்சத்து 62 ஆயிரத்து 682 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். 

  தொடர்ந்து, அமைச்சர் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னனு வீடியோ வாகனத்தின் மூலம் ஒளிபரப்பப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

  விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயசிங் தியகாராஜ் நட்டர்ஜி, மகளிர் திட்ட இயக்குநர் ரேவதி,  ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் காளிராஜ், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் டி.தாமஸ் பயாஸ் அருள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, வஉசி பிறந்த நாள் விழா முப்பெரும் விழாவாக நடக்கிறது. சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வஉசி சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை செலுத்துகின்றனர். அவரது பிறந்த மண்ணான தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள வஉசி நினைவு இல்லத்திலும், திருநெல்வேலியில் உள்ள மணி மண்டபத்திலும் விழா நடக்கிறது. யாரும் தலைவர்களை விமர்ச்சிக்கலாம், கருத்து உரிமை உள்ளது. அதில் மாறுபட்ட கருத்து இல்லை. அதிலும், இடம் பொருள் உள்ளது. பொது இடத்தில், அந்த பெண்ணுக்கு மாறுபட்ட கருத்து இருந்தால் தமிழிசை விமானத்தில் இறங்கி வந்த பின்னர் கூறியிருக்கலாம். அரசின் கொள்கை மாற்றத்தில் ஏதாவது கருத்து இருந்து பரிமாறியிருந்தால் இவ்வளவு பிரச்சினைக்கு வழிவகுத்திருக்காது.  ஆனால், பொது இடத்தில் அவரும் பாதிக்கப்படுகின்ற மனநிலையை உருவாக்கி, விமான வருகின்ற நேரத்தில் அவ்வளவாக அவசரமாக கருத்தை பதிய வைக்க வேண்டிய அவசியமில்லை.  மாற்று கருத்துகளை, விமர்சனங்களை யாரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், வெளிப்படுத்துகிற விதம் உள்ளது. இதில், அந்த மாணவிக்கு போதுமான அவகாசம் இருந்தது. விமானம் தரையிறங்கி பயணிகள் எல்லாம் வந்து சேர்ந்த நேரத்தில், தமிழிசையுடன் நேராக சொல்லி, அரசின் நிலைபாட்டிலோ அல்லது பாஜ கொள்கை நிலைபாட்டிலோ எதாவது மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்தியிருந்தால், அது நிச்சயமாக ஒரு ஜனநாயக முறைப்படி மட்டுமல்ல மரபுப்படி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாக இருந்திருக்கும். 

  இப்படி விமர்சனத்துக்கு உட்பட்டு இதுபோன்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்காது என்பது எங்கள் கருத்து. அது வழக்கு செய்யப்பட்டது. அது தொடர்பானவையை காவல்துறை விசாரித்து வருகிறது. தமிழகத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் நல்ல சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. யாருக்கும் யாரும் மிரட்டல் விட முடியாது. யாரும் மிரட்டல் விட்டால் அரசு பார்த்துக்கொண்டிருக்காது, என்றார் அவர்

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad