கோவில்பட்டியில் விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் அய்யனார்(25). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 15.4.2009 அன்று வேலைக்கு செல்ல கடலையூர் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். லாயல் மில் காலனி அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த அரசு பேருந்து மோதியதில் படுகாயமடைந்த அய்யனார், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது தாய் முத்துலட்சுமி நஷ்டஈடு கேட்டு கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி 3.12.2016 அன்று முத்துலட்சுமிக்கு ரூ.3 லட்சத்து 53 ஆயிரத்து 400 வழங்க போக்குரவத்து கழகத்துக்கு உத்தரவிட்டார்.இந்த தொகையை போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. இதையடுத்து முத்துலட்சுமி மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி பாபுலால், கடந்த 14-ம் தேதி அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சார்பு நீதிமன்ற அமீனா சங்கரநாராயணன் இன்று கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து மதுரைக்கு செல்ல தயாராக இருந்த அரசு பேருந்து ஜப்தி செய்து, கோர்ட் வளாகத்துக்கு கொண்டு வந்தார். இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை