கோவில்பட்டியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சார பேரணி
கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சார பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் ஊட்டச்சத்து பணியாளர்கள் கலந்து கொண்டு, வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுங்கள். கால்சியம் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும் அளவு எடுத்துக்கொள்ளுங்கள். பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாதங்கள் முடிந்தவுடன், தாய்ப்பாலுடன் பிற உணவுகள் வழங்கலாம் என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்களை கைகளில் ஏந்தி சென்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கிய பேரணி எட்டயபுரம் ரோடு, புதுரோடு, கடலையூர் ரோடு, மில் தெரு, மெயின் ரோடு, மாதாங்கோயில் ரோடு வழியாக மீண்டும் அலுவலகத்தை வந்தடைந்தது. பேரணியில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் .சிவராமகிருஷ்ணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சண்முகசுந்தரி, மேற்பார்வையாளர்கள் சாந்தி, பொன்இசக்கி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை