Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் நூதன முறையில் ஹெல்மேட் விழிப்புணர்வு பிரச்சாரம்


    கோவில்பட்டியில் இரு சக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் ஹெல்மேட் அணிய வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக காவல்துறை சார்பில் ஹெல்மேட் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை டி.எஸ்.பி.ஜெபராஜ் தொடங்கி வைத்தார். 


    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எமதர்மராஜா வேடமணிந்த நபர் ஒருவர் ஹெல்மேட் அணியமால் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை கையில் வைத்திருந்த பாசக்கயிற்றினால் கழுத்தில் மாட்டி, ஹெல்மேட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது, நான்கு சக்கரவாகனங்களில் சீட் பெல்ட் கட்டயமாக அணிய வேண்டும், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டக்கூடாது என்பது உள்ளிட்ட சாலை விதிமுறைகள் குறித் துண்டுபிரசுரங்களையும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் ஹெல்மேட் அணிந்து வாகனம் ஓட்டிவந்த வாகனஓட்டிகளுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், ஆய்வாளர்கள் பவுல்ராஜ் (கிழக்கு), விநாயகம் (மேற்கு), உதவி ஆய்வாளர் வசந்தகுமார், போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுடலைமுத்து உள்பட திரளான போலீஸார் கலந்து கொண்டனர். 
    இந்தப் பிரசாரம், கோவில்பட்டி மாதாங்கோவில் தெரு, எட்டயபுரம் சாலை, புதிய சாலை உள்ளிட்ட இடங்களிலும்  நடைபெற்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad