• சற்று முன்

    நாடார் சமுதாய மக்களை இழிவாக பேசிய கருணாஸை கண்டித்தும் அவரை கைது செய்ய கோரியும் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார்.


    நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார்.அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார். 

    மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.இதனை அடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது  நேற்று வழக்குப்பதிவு செய்தனர். யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.


    இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற சூழலில் கருணாஸ் தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் நாடார்  சமுதாய மக்களை இழிவாக பேசிய நகைச்சுவை நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான  கருணாஸை  கண்டித்தும் அவரை கைது செய்ய கோரி அயப்பாக்கம் TNHB சுற்றுவட்டார நாடார் உறவின் முறை நலச்சங்கத்தின் சார்பாக திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் அவரை கைது செய்யவில்லை என்றால் மிக பெரிய போராட்டத்தை நடத்த இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் : ஆண்டனி ரேவந்த் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad