• சற்று முன்

    வாட்ஸ் ஆப் மூலம் உயர் காவல் அதிகாரிகளை மிரட்டி வந்த புல்லெட் நாகராஜன் கைது


    சமிபத்தில் வாட்ஸ் ஆப் மூலம் பெண் காவல் உயர் அதிகாரிகளை மிரட்டி வந்த நாகராஜ் என்ற புல்லட் நாகராஜன் பெரியகுளம் கிராமத்தை சேர்ந்தவன். புல்லட் வைத்து பல கொள்ளை, கொலை வழக்குகளில் ஈடுபட்டதால் புல்லட் நாகராஜன் என மாறியது.

    வாட்ஸ்ஆப் மூலம் பெண் எஸ்.பி. ஊர்மிளா, ஆய்வாளர் மதனகலா, தேனி மாவட்ட கலெக்டர் உள்ளிட பல உயர் அதிகாரிகளை மீரட்டி வந்த நிலையில் இன்று காலை அவனது சொந்த ஊரில் பெரிய குளத்தில் உள்ள மாதாகோவில் அருகே காவல் துறையினர் புல்லட் நாகராஜனை பலவந்தமாக கைது செய்தனர். புல்லட்டில் இருந்து கீழே இறங்கும் போது சீருடையில்லா காவலர் ஒருவர் எதிர்பாரத நேரத்தில் திடீர் என பாய்ந்து பின்பக்கம் சட்டையை கொத்தாக பிடித்து இழுத்து சென்று காவல் வாகனத்தில் ஏற்றினார். பொது மக்கள் மத்தியில் நடைபெற்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட புல்லட் நாகராஜனிடம் ஒரு கோடி ரூபாய் கள்ள நோட்டுகளும், இரண்டு பொம்மை துப்பாக்கி, வழக்கறிஞர் கவுன் நீதிபதி ரப்பர் ஸ்டாம்ப் போன்றவற்றை கைப்பற்றப்பட்டன.

    செய்தியாளர் : பொன் முகரியன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad