Header Ads

  • சற்று முன்

    தமிழக அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் தஞ்சாவூர் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் பரிசை வென்றனர்.


    சென்னை அம்பத்தூர் அடுத்த அயனம்பாக்கத்தில் தனியார் பள்ளியில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் முதல் பரிசை தட்டி சென்ற அரசுபள்ளி மாணவர்கள் - முன்னாள் இந்திய கபடி அணி பயிற்சியாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.



    சென்னை அம்பத்தூர் அடுத்த மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா இணைப்பு பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு கபடி குழுவான தமிழ் தலைவர் மற்றும் வேலம்மாள் வித்யாலயா இணைப்பு பள்ளி இணைந்து மாநில அளவிலான 15 வயதுக்குட்டபட்ட சிறுவர்/சிறுமிகளுக்கான கபடி போட்டியை நடத்தினர்.



    கடந்த 7ஆம் தேதி முதல் நடந்த போட்டிகளில் இதில் தமிழகம் முழுவதும் இருந்து 32 அணிகள் பங்கேற்றன.  இன்று இதற்கான அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைப்பெற்றன. இன்று நடந்த போட்டியின் பொழுது தமிழ்நாடு சார்பாக ப்ரோ கபடியில் பங்கேற்ற தமிழ் தலைவா அணி வீரர்களும் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். 

    ஆண்கள் இறுதிபோட்டியில் தஞ்சாவூர் அரசுபள்ளி மாணவர்களும், விழுப்புரம் அரசு பள்ளி மாணவர்களும் விளையாடினர் இதில் தஞ்சாவூர் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றிப்பெற்றனர். இதே போல் பெண்கள் பிரிவில் புதுச்சேரி தந்தை பெரியார் அரசுப்பள்ளி மாணவிகளும், சென்னை அமிர்தா வித்யாலயா பள்ளி மாணவிகளும் விளையாடினர். இதில் சென்னை அமிர்தா பள்ளி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு இந்திய கபடி அணியின் முன்னாள் பயிற்சியாளர் பாஸ்கரன் பரிசு கோப்பைகளையும், பதக்கங்களையும் வழங்கினார்.

    இப்போட்டியில் வெற்றி பெற்ற தஞ்சாவூர் அரசுபள்ளி மாணவன் கூறும் பொழுது தனியார் பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் வெற்றிப்பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் , கபடி ஆர்வத்தை மேலும் தூண்டுவதாகவும் தெரிவித்தார்.

    எமது செய்தியாளர் : கதிரவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad