Header Ads

  • சற்று முன்

    தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் வளர்சிக்கு துணை போகும் பழனி நகராட்சி ........நடவடிக்கை எடுப்பாரா நகராட்சி ஆணையர்


    பழனி சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்கள் பழனி அரசு மருத்துவ மனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஒரு நாளைக்கு சராசரி 500 கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். 


    இது போக உள்நோயாளிகள் அவசர அறுவை சிகிச்சைக்கென்ன நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு என தனி வார்டு உள்ளன. மகபேறு காலத்தில் புற நோயாளிகளாக வருபவர்கள் 
    இந்த அரசு மருத்துவமனை வளாகத்தில் பிரசவ வார்டு, புற நோயாளிகளுக்கு உணவு சமைக்கும் சமையல்  அறை, அரசு  மருத்துவர்கள்  ஒய்வு அறை, மற்றும் பிரேத பரிசோதனை என ஒன்றன் பின் ஒன்றாக கட்டடங்கள் அமைந்துள்ளன. இந்த கட்டடங்கள் சுற்றி மலை போல் மருத்துவ கழிவுகள், சமையல் செய்யும் உணவு கழிவுகள் என மேலும் மகளிர் மகபேறு அவர்கள் பயன்படுத்திய கழிவுகள் என அனைத்து கழிவு பொருட்களும் மலைபோல் குவிந்து காணப்படுகிறது . சுத்தம் சுகம் தரும் என்பார்கள் ஆனால் சுகாதாரம் இல்லாத இடத்தில் செய்யும் உணவு புற நோயாளிகளுக்கு கொடுத்தால் நோயாளி எப்படி ஆரோக்கியமாக வாழமுடியும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.



     "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ஆனால் பழனி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செல்வம் குறைவிருக்கிறதோ இல்லையோ குப்பைகளுக்கும் சுகாதரதிற்கும் பஞ்சம் இருக்காது என சமுக
    இந்த மலை போல் குவியும் குப்பைகளை அள்ள அரசு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்பந்த ஊழியர்கள் மருத்துவ கழிவு  குப்பைகளை தினம் தோறும் அள்ளாமல்  நாட்பட அங்கயே போட்டுவிடுகின்றனர். பிறகு மக்கும் குப்பை மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றன்றனர்.

    எமது செய்தியாளர் : பழனி - சரவணக்குமார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad