கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், தென்பெண்ணை ஆற்றில், 1040 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. . இதனால் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது
.தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு, கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதியில் விட்டு, விட்டு மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் தண்ணீரில் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது.
ஆணை நிரம்பியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், இன்று காலை,978கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான, 44.28 அடியில், 42.15 அடி அளவிற்கு தண்ணீர் இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 1040 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது..
இதனால், பூதிநத்தம், பேரண்டப்பள்ளி, கோபசந்திரம், ஆழியாளம், நயன்கொண்டஅக்ராகாரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது,
Tags:
தமிழகம்

