• சற்று முன்

    5 கோடி செலவில் பசுமை பூங்கா முதலமைச்சர் திறந்து வைத்தார்



    சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அம்மாபேட்டை, தர்மநகர், முல்லைநகர், பிரகாசம் நகர் உள்ளிட்ட 12 இடங்களில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளுடன் கூடிய பசுமைவெளி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காக்களில், மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காக நடைபாதைகள், தியான மண்டபங்கள் மற்றும் மூலிகை பண்ணை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. சேலம் அம்மாபேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த பசுமைவெளி பூங்காக்களை தொடங்கி வைத்தார்.

    இதைத் தொடர்ந்து சேலம் நேரு கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றார். மாநகர காவல் ஆணையரகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு ரோந்து குழுவிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குதல் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் இந்த நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் உரையாற்றினார். இந்திய அளவில் தமிழகத்தில் கல்வி தரம் உயர்ந்துள்ளதாகவும், தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் அவர் கூறினார். ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை ஜனவரி 1 முதல் அமலாவதால், மாற்று பொருளாக வாழை இலை, துணிப் பைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad