கள்ளச்சாராய வியாபாரி மீது நடவடிக்கை எடுக்கதாக காவல் நிலையத்தை கண்டித்து கிராம மக்கள் காவல் நிலையம் முன்பு சாலைமறியல்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்சாண்றோர்குப்பம் பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் சமூக விரோத செயலில் ஈடுப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உமராபாத் காவல் நிலையத்தில் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் காவல் துறையினர் அந்த புகார் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மீண்டும் இன்று காலை கள்ளச்சாராயம் விற்பனை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால் காவல் துறையினர் புகாரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இதனை கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் தீடீரென ஆம்பூர் - பேர்ணாம்பட்டு சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலை மறியலால் ஆம்பூர்- பேர்ணாம்பட்டு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்ப இடத்தில் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.
செய்தியாளர் : அக்னி புயல்
கருத்துகள் இல்லை