ஓசூரில், ரோட்ரி கிளப்-ரோஸ் சிட்டி சார்பில் நல் ஆசிரியோர் விருது, கற்ப்பித்தலில் சிறந்து விளங்கிய 134 பள்ளியில் சுமார் 250 ஆசிரியர்களை கௌரவிப்பு*
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை மையமாகக்கொண்டு இயங்கி வரும் ரோட்ரி கிளப் - ரோல் சிட்டி, போலியோ ஒழிப்பு திட்டத்தில் இந்திய அரசுடன் இனைந்து மிகவும் சிறப்பாக செயல்பட்டது, போலியோ ஒழிப்பிற்க்கு ரோட்ரி கிளப் - ரோஸ் சிட்டியின் தொண்டு அலைப்பறியாதது,
ரோட்ரி கிளப் ரோஸ் சிட்டியின் அடுத்த இலக்கு கற்ப்பித்தல், இதன் ஒரு பகுதியாக பள்ளிகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக ஓசூர்,இராயக்கோட்டை,கெலமங்கலம்,பாகலூர்,சூளகிரி, தேன்கனிகோட்டை, தளி, உள்ளிட்ட பகுதிகளில் 134 பள்ளி தேர்ந்தெடுத்து அதன் பின் மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின்படி 250 ஆசிரியர்களை தேர்வு செய்து, சிறந்த ஊக்குவிப்பு,பயிற்றுவிப்பு ஆசிரியர்களை ரோட்ரி கிளப் ரோஸ் சிட்டி சார்பில் அவர்களுக்கு பொண்னாடை போத்தி சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவிக்கப்பட்டது,
நம்மிடையே பேசிய ஆசிரியர்கள்:
ரோட்ரி கிளப் ரோஸ் சிட்டி எங்களை சிறந்த நல் ஆசிரியராக கௌரவிப்பிற்க்கு பிறகு எங்களுடைய கடமையும், மாணவர்களுக்கு தொண்டாட்ட வேண்டிய உணர்வும் அதிகரித்துள்ளது, அது எங்களுடைய இலக்காக மாறியுள்ளது எனவும், சிறந்த ஆசிரியர்களை கௌரவித்த ரோட்ரி கிளப் ரோஸ் சிட்டிக்கு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்தனர். உணர்வு பூரமாக இருந்த இந்நிகழ்ச்சியில் ரோட்ரி கிளப் ரோஸ் சிட்டியின் தலைவர் மற்றும் ஆசிரியருமான அமரநாராயணன் மற்றும் ரோஸ் சிட்டி கிளப் உறுப்பிணர்கள்,
ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர்கள் DEO சுப்பிரமணி,DEO லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்கள்,
கருத்துகள் இல்லை