சென்னை ஆவடி தனியார் கல்லூரி மாணவி கல்லூரி வளாகத்தில் தற்கொலைக்கு முயற்சி !
சென்னை ஆவடி அடுத்த மோரை கிரமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்.இவரது இளைய மகள் சினேகலட்சுமி/18 இவர் ஆவடி அருகே வீராபுரத்தில் உள்ள வேல்டெக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற மாணவி,வகுப்பறையின் 3 மாடியில் மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த சினேகலட்சுமி போருரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முதல்கட்ட சிகிச்சை முடிந்த பின்னர் கல்லூரி நிர்வாகம் எந்த பதிலளிக்காததால் மாலை 7 மணி வரை மேல் சிகிச்சை அளிக்கப்படவில்லை.
இதனால் மருத்துவமனைக்கு தாமதமாக வந்த கல்லூரி முதல்வரை மாணவர்களும் ,உறவினர்களும் முற்றுகையிட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் மாணவி அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே மாணவரின் தற்கொலை முயற்சிக்கு காரணம் கல்லூரியில் ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகின்றது.
இது குறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில் சினேலட்சுமி கல்லூரியில் ஆசிரியர் தினம் கொண்டாப்படுவதால் புத்தாடை அணிந்து மிகுந்த உற்சாகத்துடன் தான் கல்லூரிக்கு சென்றார். திடீரென அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சிதார் என்பது நம்ப முடியவில்லை. கல்லூரியில் முறையான பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டிய அவர்கள் கல்லூரி மீது தங்களுக்கு சந்தேகம் உள்ளது என்றும் இந்த சம்பவத்திற்கு கல்லூரி நிர்வாகம் முழு பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார். ஆவடி வேல்டெக் பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டு ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த புருஷோத்தமன் என்ற மாணவர் இதேபோல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
எமது செய்தியாளர் : ஆவடி - ஆண்டனி
கருத்துகள் இல்லை