Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் மெயின்சாலையில் தோண்டப்பட்ட குழியை மூட வலியுறுத்தி நூதன போராட்டம்


    கோவில்பட்டி மெயின்சாலையில் 2வது குடிநீர் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட குழி கடந்த 2மாதங்களுக்கு மேலாக மூடப்படமால் இருப்பதால் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால், அந்த குழியை மூட வலியுறுத்தி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் குழிக்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின்சாலையில் கடந்த 2மாதங்களுக்கு முன்பு 2வது குடிநீர் திட்டப்பணிகளுக்காக குழி தோண்டப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்த பின்பு இந்த குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை, மெயின்சாலையில் உள்ள இந்த குழியினால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்த காரணத்தினால், குழியை மூட நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினரிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அதன் நகர செயலாளர் முருகன் தலைமையில் மெயின் சாலையில் தோண்டப்பட்ட குழிக்கு மாலை அணிவித்து, குழியை மூடக்கோரி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குழிக்கு அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குழியை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தினை கைவிட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad