Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே புகழ்பெற்ற கம்மாப்பட்டி தேவலாய திருவிழா - மேள தளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் நடைபெற்ற சப்பர பவனி


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் கம்மாப்பட்டியில் இருக்கும் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழாவினை முன்னிட்டு மேளதளம் முழங்க வாண வேடிக்கைகளுடன் 4 சப்பரங்களின் பவனி நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு கும்படு சரணம் போட்டு வழிபட்டனர்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் கம்மாப்பட்டியில் இருக்கும் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இப்பகுதியில் இந்த தேவலாயம் புகழ் பெற்றது. கிறிஸ்துவ மக்கள் மட்டுமின்றி, அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் வழிபாடு நடத்துவது உண்டு, இந்த தேவலாயத்தில் திருவிழாவின் போது நடைபெறும் சப்பரபவனியின் போது பின்னால் கும்பிடு சரணம் போட்டால், நோய் நொடிகள் நீங்கும், நினைத்த காரியங்கள் நடைபெறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 3ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி, நவநாள் ஜெபம், மறையுரைச் சிந்தனைகள் நடைபெற்றது வந்தன. பல்வேறு தேவலாயங்களில் இருந்து பங்குதந்தைகள் வருகை தந்து நற்கருணைஆசிர் வழங்கி வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பர பவனி நள்ளிரவு  நடைபெற்றது. இதனை முன்னிட்டு தேவலாய பங்கு தந்தை வின்சென்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் சப்பரங்களுக்கு சிறப்ப ஆராதனை நடைபெற்றது. 


    இதனை தொடர்ந்து மேள தளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க சப்பரபவனி தொடங்கியது. முதலில் மிக்கேல் அதிதூதர் சப்பரமும், அதனை தொடர்ந்து அந்தோணியார் ,ஜெபஸ்தியார் சவேரியார் மற்றும் ஆலய பாதுகாவலர் மிக்கேல் அதிதூதர் ஆகியோர் உருவம் தாங்கிய நான்கு தேர்கள் சப்பரங்களின் பவனியும் செண்டை மேளம் முழங்க வாணவேடிக்கைகளுடன் நடைபெற்றது. தேவலாயம் முன்பு தொடங்கி கிராமத்தின் அனைத்து தெருக்கள் வழியாக உலா வந்து மீண்டும் தேர்கள் தேவலாயத்தினை வந்தடைந்தது. கோவில்பட்டி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கயத்தார் பகுதிகளை சேர்ந்த திரளான ஆண்களும், பெண்களும் சப்பரங்களின் பின்னே கும்படு சரணம் போட்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad