• சற்று முன்

    கோவில்பட்டியில் தொடர் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை


    கோவில்பட்டி நகரில் ஏற்பட்டுள்ள தொடர் விபத்துக்களை தடுக்க சாலைகளை சீரமைக்கவும், தடுப்பு சுவர் மற்றும் குறுகிய பாலத்தினை அகலப்படுத்த வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கத்தினர் கை,தலையில் பேண்டேஜ் அணிந்து கோட்டாட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்தனர்.



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாதங்கோவில் சாலை முதல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வரையிலான எட்டயபுரம் சாலையில் தொடர்ந்து விபத்;துக்கள் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், மேலும் அப்பகுதியில் உள்ள குறுகிய பாலத்தினை அகலப்படுத்த வேண்டும், கடந்த 2மாதங்களில் மட்டும் 7 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்பதனை அரசு கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், இது தவிர செண்பகவல்லியம்மன் கோவில் முதல் இளையரசனேந்தல் சுரங்கபாலம் வரை உள்ள சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் கை,தலையில் பேண்டேஜ் அணிந்து கோட்டாட்சியர் விஜயாவிடம் நூதன முறையில் மனு அளித்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து  சென்றனர்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad