Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த 5 லாரிகள் பறிமுதல்


    கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகே சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற 5 லாரிகளை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த மேற்கு காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கூடுதல் பஸ் நிலையம் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக சென்ற 5 லாரிகளை சோதனையிட்ட போது அதில் மணல் இருந்தது தெரியவந்தது. ஆனால் மணல் ஏற்றி செல்வதற்கான எவ்வித உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரிய வரவே போலீசார் 5 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விருதுநகர் பகுதிகளில் இருந்து சட்ட விரோதமாக மணல் அள்ளி நெல்லைக்கு கொண்டு செல்லப்படுவது தெரிய வந்ததது. இதனை தொடர்ந்து மணல் ஏற்றி வந்த 5 லாரிகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தியுள்ளனர்.  மேலும் இது குறித்து வருவாய் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். வருவாய்துறையினர் விசாரணை நடத்தி உரிய ஆவணம் இல்லை என்று தெரிய வந்தால் அபாரதம் விதித்து மேல் நடவடிக்கை எடுப்பார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



    குறிப்பு. 
    பறிமுதல் செய்யப்பட்ட இந்த 5 லாரிகளும் மேற்கு காவல் நிலைய சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் அப்பகுதி வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் மிகுந்த சிறமத்திற்குள்ளாக வேண்டிய நிலை உள்ளது. எனவே பள்ளி மாணவ மாணவியர்களின் நலன் கருதி இந்த பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் நிறுத்த வேண்டும் என பொது மக்கள்  கோரிகை வைக்கின்றர் 

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad