Header Ads

  • சற்று முன்

    சாலையில் கேட்பாரற்று கிடந்த பையை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளி



    கோவில்பட்டி பிரதான சாலையில் கேட்பாரற்று கிடந்த பையை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளியை காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். 

    கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையப் பகுதியில் மேற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் முத்துவிஜயன் தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பிள்ளையார்நத்தத்தைச் சேர்ந்த ராமர் மனைவி குருவம்மாள் தான் மோட்டார் சைக்கிளில் தனது குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது மோட்டார் சைக்கிளின் முன்பக்கம் உள்ள கைப்பிடியில் தொங்கவிட்டிருந்த கைப்பை தவறிவிட்டதாகவும் புகார் தெரிவித்தார். அதையடுத்து போலீஸார் அவர் சென்ற சாலையில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கோவில்பட்டி லட்சுமி மில் காலனியைச் சேர்ந்த தொழிலாளி கண்ணன் தான் அண்ணா பேருந்து நிலையம் அருகே சாலையில் கிடந்த பையை கண்டெடுத்ததாகவும், அதில் செல்லிடப்பேசி மற்றும் வங்கி ஏ.டி.எம். கார்டுகள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவை இருந்ததாகவும் கூறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதையடுத்து போலீஸார் கைப்பையை தவறவிட்ட குருவம்மாளை காவல் நிலையத்திற்கு அழைத்து உரிய விசாரணை செய்து தவறவிட்ட கைப்பையை ஒப்படைத்தனர். அதைப் பெற்றுக் கொண்ட குருவம்மாள் வங்கி ஏ.டி.எம். கார்டில் ரூ.1 லட்சத்திற்கும் மேலான பணம் இருப்பதாகவும், இதைக் கண்டெடுத்த தொழிலாளிக்கும், ஒத்துழைத்த காவல் துறையினருக்கும் நன்றி தெரிவித்தார். அதையடுத்து, கைப்பையைக் கண்டெடுத்த கண்ணனை கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் விநாயகம் ஆகியோர் கண்ணனின் செயலைப் பாராட்டி வெகுமதி அளித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad