• சற்று முன்

    கோவில்பட்டியில் அதிவேக காற்றுக்கு நீதிமன்ற கட்டிடத்தில் சரிந்து விழுந்த பழமையான மரம்



    கோவில்பட்டி பகுதியில் வீசி அதிவேக காற்றுக்கு நீதிமன்ற வளாகத்தில் இருந்த சுமார் 72 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பு மரம் ஒன்று வேரோடு பெயர்ந்து, மாவட்ட சார்பு நீதிமன்றம் கட்டிடத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றோடு, அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இன்றும் காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. மேலும் காற்றி வேகம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சார்பு நீதிமன்றம் அருகே இருந்த சுமார் 72 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வேப்ப மரம் தீடீரென வேரோடு சரிந்து, சார்பு நீதிமன்றத்தின் கட்டிடத்தில் சரிந்து விழுந்தது. நீதிமன்றம் நடைபெற்று கொண்டு இருக்கும் போது மரம் தீடீரென சரிந்து விழுந்த காரணத்தினால் ஊழியர்கள் அச்சமடைந்து வெளியேறினர். மரம் சரிந்து கட்டிடத்தில் சரிந்த காரணத்தினால் யாருக்கும் எதுவும் ஏற்படமால் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad