கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் உர மூட்டையுடன் விவசாயிகள் நூதன போராட்டம்
விவசாயிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் உரத்திற்கான அளவு குறைக்கப்பட்டதை கண்டித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை விவசாயிகள் அளவு குறைக்கப்பட்ட உரமூட்டையுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உரத்திற்கான மானியத்தினை நிறுத்த மத்தியரசு மறைமுகமாக முயற்சி செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு மத்தியரசு மானிய விலையில் விவசாயத்திற்கு பயன்படுத்த டி.ஏ.பி,யூரியா உள்ளிட்ட உரங்களை மானியவிலையில் வழங்கி வருகிறது. தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மானிய விலையில் விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 50 கிலோ கொண்ட டி.ஏ.பி ரூ.1330க்கு, அதே போல் 50 கிலோ கொண்ட யூரியா ரூ265க்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது யூரியா மட்டும் 50 கிலோக்கு பதிலாக 45கிலோ வழங்கப்படுவதாகவும், ஆனால் 50கிலோவிற்கான தொகை வசூலிக்கப்படுவதாகவும், மத்தியரசு உரத்திற்கான மானியத்தினை நிறுத்தும் வகையில் உர விலையை ஏற்றமால், உரத்தின் அளவினை குறைத்து மறைமுகமாக படிபடியாக மானியத்தினை நிறுத்த முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள், குறைந்த அளவுடன் வழங்கப்பட்ட யூரியா உர மூட்டையூடன் கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு, உர மூட்டைக்கு மாலை அணிவித்து மத்தியரசு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து தங்களது கோரிக்கை அடங்கிய மனுவினையும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தினால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை