• சற்று முன்

    ஓசூரில், அரசு செய்ய தவறிய கைப்பந்து விளையாட்டு திடலை, தனியார் நிறுவனம் செய்யமுன்றபோது விளையாட்டுதுறை அமைச்சரே தடுக்கும் கொடுமை


    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் பல ஏக்கர்களில் மாணவர்கள் விளையாடியும், ஓசூர் நகர மக்கள் உடற்பயிற்சி மேற்க்கொள்ளும் பயனுள்ள மைதானமாக விளங்கி வருகிறது. இளைஞர்கள் சார்பில் பள்ளி மைதானத்தில் கைப்பந்து (Volleyball) விளையாட்டு திடலை அமைத்து தருமாறு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துவந்தனர். அரசின் செவிகளில் படாததால் நல்உள்ளம் படைத்த தனியார் நிறுவனம் 25 லட்சம் ரூபாயில் இளைஞர்கள், மாணவர்கள் பயன்பெற கைப்பந்து மைதானத்தை புதியதாக கட்ட ஆரம்பித்தனர்


    இந்நிலையில், ஓசூரில்  வருகிற ஞாயிற்றுக்கிழமை 19/08/2018 அன்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துக்கொண்டு பள்ளி மாணவர்களுடேயே விளையாட்டு போட்டிகளை துவக்கி வைக்க உள்ளார், அரசு நிகழ்ச்சி ஏற்பாடு பணிகளை பார்வையிடவந்த ஓசூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இளைஞர் நலன் மற்றும்  விளையாட்டுதுறை அமைச்சர்  பாலகிருஷ்ணா ரெட்டி, தனியார் நிறுவனம் சார்பில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் கைப்பந்து விளையாட்டு திடலை, கல்வித்துறை அமைச்சர் வருகைக்கு இடையூறாக இருக்கும் என கருதி, இளைஞர்கள் பயண்பெறும் விளையாட்டு திடலை விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சரே, அவசரமாக பணிகளை நிறுத்துமாறும் மேற்க்கொண்டு பணிகளை மேற்க்கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு அமைச்சர் தெரிவித்தாக கூறப்படுகிறது.


    சொந்த தொகுதி இளைஞர்களின் துறைசார்ந்த  நீண்ட நாள் கோரிக்கையையும்   அமைச்சரால் நிறைவேற்றாவிட்டாலும் தன்னார்வத்தோடு இளைஞர்நலனை கருத்தில் கொண்டு முன்வந்த தனியார் நிறுவனத்தையும் , அமைச்சர் தடுப்பதை ஓசூர் பகுதி மக்கள் இளைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். விளையாட்டுத்திடலை அமைக்கவிடாமல் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரே தடுப்பது இப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad