• சற்று முன்

    கோவில்பட்டியில் ஹெல்மேட் குறித்த இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி – திரளான போலீசார், பொதுமக்கள் பங்கேற்பு



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் அனைவரும் ஹெல்மேட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும் என்பதனை வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோவில்பட்டி டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் டி.எஸ்.பி ஜெபராஜ் தலைமையில் விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது, இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது வாகனம் ஓட்டுபவர், பின்னால் அமர்ந்து செல்பவர் கட்டயாம் ஹெல்மேட் அணிய வேண்டும்,செல்போன் பேசிய படி வாகனம் ஒட்டக்கூடாது, சாலை போக்குவரத்து வீதிகளை மீறக்கூடாது என்று உறுதி மொழி எடுத்து கொள்ளப்பட்டது மட்டுமின்றி, பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. 



    இதனை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். டி.எஸ்.பி. ஜெபராஜ் தலைமையில் போலீசார் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்ட இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி எட்டயபுரம் ரோடு, கதிரேசன் கோவில் சாலை, மெயின்ரோடு, புதுரோடு வழியாக மீண்டும் டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் நிறைவு பெற்றது.


    பேரணியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத், காவல்துறை ஆய்வாளர்கள் பவுல்ராஜ்(கிழக்கு), விநாயகம்(மேற்கு), ஆவுடையப்பன்(கயத்தார்), ஜூடி (நாலாட்டின்புதூர்), முத்துலெட்சுமி (கழுகுமலை), ஆக்டிவ் மைண்ட்ஸ் நிறுவனர் தேன்ராஜா மற்றும் போலீசார், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்,

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad