Header Ads

  • சற்று முன்

    திருவாடானையில் தமிழ்நாடு விவசாயம் சங்கம் சார்பில் குடி அமரும் போராட்டம் நடைபெற்றது.



    திருவாடானையில் விவசாய சங்கம் சார்பில் பயிற் காப்பீடு தொகை உடனடியாக வழங்க கோரி தாலுகா அலுவலகம் முன்பு குடி அமரும் போராட்டம் நடைபெற்றது.


    திருவாடானையில் விவசாய சங்கம் சார்பில் விடுபட்ட அணைத்து விவசாயிகளுக்கும் பயற்காப்பீட்டு தொகையினை உடனடியாக வழங்கிட கோரி மாநில விவசாய சங்க பொருளாலர் பெருமாள் தலைமையிலும், தாலுகா செயலாளர் ராசு, தாலுகா தலைவர் செந்தில்குமார், மாவட்ட குழு உறுப்பினர் நாகநாதன், தாலுகா துணை தலைவர் சந்தானம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். விவசாயிகள் சஙகம் சார்பில் நடத்திய குடிஅமரும் போராட்டத்தை தொடர்ந்து திருவாடானை தாசிலதார் சாந்தி, காவல் துணைக்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் முடிவில் வட்டாச்சியர் சாந்தி மாவட்ட நிர்வகத்திடம் பேசியதில் செப்டம்பர் மாதம் 15 தேதிக்குள் பயிற் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அணைத்து விவசாயிகளும் கலைந்து சென்றார்கள்.

    செய்தியாளர் : திருவாடானை - ஆனந்த் குமார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad