Header Ads

  • சற்று முன்

    தமிழக வரலாற்றை அறிந்து ரஜினிகாந்த் பேச வேண்டும் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு உள்ள பாண்டி முனீஸ்வரர் ஆலய ஆடி மாத திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனை தொடந்து செய்தியாளர்களிடம் அமைச்சர்; பேசுகையில் அரசு நினைத்ததால் தான் முன்னாள் முதல்வருக்குள்ளான அனைத்து வித மரபு மாண்புபடி கருணாநிதிக்கு அரசியல் நாகரீத்தோடு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெறும் திமுக செயற்குழு கூட்டத்தில் தமிழக அரசிற்கு திமுக சார்பில் நன்றி தெரிவிக்க வேண்டும். அதிமுக அரசியல் தாழ்புனர்ச்சி இல்லாமல் அனைத்து வித அரசு மரியாதை செலுத்தப்பட்டது இத்தகைய நிலை ரஜினிக்கு தெரியாது. அதிமுக துவக்கத்தில் 1972ல் ரஜினி தமிழகத்திலேயே இல்லை எனவே அரசியலைப்பற்றி தெரியாத கருத்தை ரஜினி சொல்ல வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன் என்றார். 


    பின்னர் தற்போது காலியாக உள்ள திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் உண்மையான அதிமுக வெற்றி பெறும் என டி.டி.வி தினகரன் தெரிவித்திருந்தார். அவர் கூறியது உண்மை தான் நாங்கள் தான் உண்மையாக அதிமுக எங்களிடமே இரட்டை இலை சின்னம் உள்ளது. உண்மையை கூறிய டி.டி.வி  தினகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

    தொடர்ந்து அதிமுகவில் பொது செயளாலர் குறித்த சர்ச்சைக்கு பதிலளிக்கையில் அதிமுகாவின் நிரந்தர பொது செயலாளர் அம்மா மட்டுமே அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை பற்றி பேச மற்றவர்களுக்கு தகுதி இல்லை என்றார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எங்கள் இயக்கம் அழிந்து போகும் என கூறிய திமுகாவில் தற்போது நிலவும் குழப்பம் காரணமாக அவர்கள் அனுபவிக்க போகின்றார்கள் என கூறினார். மேலும் உள்ளாட்சி தேர்தல் குறித்த நீதிமன்றம் கருத்துக்கு தேர்தலை நடத்துவது நீதிமன்றம் அல்ல அரசு தான் நடத்த வேண்டும் உரிய நேரத்தில் அரசு தேர்தலை நடத்தும் என கூறினார்



    செய்தியாளர்   : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad