கொள்ளிடத்தில் கரைபுரண்டோடும் காவேரி நீர்....... கரையோர மக்கள் அவதி
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த. கொள்ளிடத்தில் திறந்துவிடபடுகின்ற காவிரிநீர் ,காவிரி நீர் கடலில் கலக்கும் பகுதியான கொடியம்பாளையம் பகுதியில் உள்வாங்கமல் எதிர்த்து பழைய கொள்ளிடம் வழியாக தண்ணீர் எதிர்த்து ரிவெட்மென்ட் பாலப்பணி நடந்து வருகின்ற தடுப்பனையயை உடைத்து கொண்டு 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்து விடும் அபாயாம் உள்ளது, கீழனையில் திறந்து விடப்படும் 1 லட்சம் கணஅடி கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது ,இன்று அதிகாலை அதிகப்படியான தண்ணீர்,சிதம்பரம் கடைமடை பகுதிகளான ஜெயங்கொண்டபட்டினம்,திட்டுகாட்டூர்,பொராம்பட்டு, நடுத்திட்டு, கீழகுண்டபாடி ஆகிய கிராமங்களில் உட்புகுந்து தண்ணீர் கரைபுரண்டு ஒடுகிறது, இங்கு செயல்பட்டு வந்த போட் பழுதானகிபோனதால் பொதுமக்களே போட்டை சரிசெய்து ,கீழகுண்டலபாடி, அக்கரை பெராம்பட்டு ,அக்கரை ஜெயெங்கொண்டபட்டினம் பகுதிகளில் மக்களையும், மாணவர்களையும் காப்பாற்றி வருகின்றனர்,
இது வரை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை அறிவிப்பு செய்தததோடு சரி போட் போன்ற வசதிகளையும், அரசு நிர்வாகம் இது வரை செய்யவில்லை மராமத்து பணிகளை சரிவார செய்தாதே காரணம் என விவசாயிகளும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர், விவசாய நிலங்கள் குறுவை அறுவடை செய்யும் நேரத்தில் விளைவித்த நெல் பயிற்கள் நீரில் மூழ்கிவிட்டது என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர், மேலும் அரும்பு தோட்டங்கள்,மரவள்ளி கிழங்கு ஆகியவை நீரீல் மூழ்கி விட்டன. மேலும் விலை உயர்ந்த நீர்மூழ்கி மோட்டார்கள் தண்ணீரில் அடித்து செல்லபடும் அபாயம் உள்ளதால் அவற்றை எளிதில் அப்புறபடுத்த முடியவில்லை, அரும்பு விவசாயிகள், பள்ளி செல்லும் மாணவர்களும், கல்லூரிக்கும் மாணவ மாணவிகள் இக்கரைக்கும் அக்கரைக்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்,
மேலும்ழபழைய கொள்ளிட கரையில் பெராம்பட்டுஅருகில் ரிவெட்மென்ட்கட்டை கட்டும் பணி தாமதாக துவங்கியதால் ரிவெட்மென்ட்க்காக கட்டபட்ட தடுப்னை உடைந்து ரிவர்ஸ் வாட்டர் (தண்ணீர் உள்வாங்காமல்) கட்டபட்ட கட்டை உடையும் நிலையில் உள்ளதை நேரிவ் பார்க்கமுடிகிறது,15 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லபடும் தரை பாதை உடைந்து வெள்ளநீர் கிராமங்களுக்கு உள்ளே புகும் அபாயம் உள்ளது அதை பொருட்டபடுத்தாமல் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடபட்டும், வெள்ளம் சூழ்ந்தபகுதிகளில் தொடர்ந்து பணியாளர்களை வைத்து பொக்லைன், செயின் டோசர் உதவியுடன் ஆபத்தான பணிநடைபெற்று வருகிறது, தொடர்ச்சியாக ரிவேட்மென்ட்தடுப்பு சுவார் கட்டை உடைப்பு ஏற்பட்டால் வெள்ளநீர் கண்டிப்பாக ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர் மேலும்ஓப்பந்தகாரர்கள் மெத்தன பணியாலும், வெள்ள நீர் வந்துஅடித்து போனால் மீண்டும் ஒரு டெண்டர் போட்டு மீண்டும் பணம் பெற்று கொள்ளலாம் என்றே காலம் தாழ்த்தி வேலை செய்கின்றனர் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்....தற்போது சிதம்பரத்தில் இருந்து தற்போது சார் ஆட்சியர் ராஜேந்திரன் மற்றும் பாதுகாப்பு பணிக்க 1 தீயனைப்பு வாகணமும் Live jacket போடபட் தீயனைப்பு வீரர்களும் அக்கரையில் தவிக்கும் பொதுமக்களையும் மாணவர்களையும் மீட்க காலை 11.00மணியிலிருந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர், சார் ஆட்சியர் ராஜேந்திரன் வெள்ள நீரில் களத்தில் இடுப்பளவு நீரில் நின்று கொண்டு களப்பணியாற்றுவதை அப்பகுதியயை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பாராட்டுகின்றனர்,மேலும் தீயனைப்பு வாகணங்களும் அதிக அளவில் ஈடுபட்டு வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் இயந்திர படகுகளை கொடுத்து போர்க்கால அடிப்படையில் வெள்ளபணிகள் நடைபெற வேண்டும் எனபொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர், நேரம் நேரம் செல்ல தண்ணீரின் வேகம் அதிகரிப்பதை நேரில் பார்க்க முடிகிறது .
செய்தியாளர் கடலூர் - செல்வகணபதி.
செய்தியாளர் கடலூர் - செல்வகணபதி.
கருத்துகள் இல்லை